டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி காரின் அலாய் சக்கரங்கள் இப்படிதான் இருக்கும்போல!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்

டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி காரின் இரட்டை நிற அலாய் சக்கரங்கள் புதிய ஸ்பை படங்களின் மூலமாக வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி காரின் அலாய் சக்கரங்கள் இப்படிதான் இருக்கும்போல!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்

டாடா எச்பிஎக்ஸ், கடந்த சில மாதங்களாக பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள எஸ்யூவி மாடல். இந்த டாடா தயாரிப்பு கிட்டத்தட்ட கடந்த 6 மாதங்களாக பொது சாலைகளில் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி காரின் அலாய் சக்கரங்கள் இப்படிதான் இருக்கும்போல!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்

2021ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த டாடா கார் தற்போது மீண்டும் மும்பை- புனே நெடுஞ்சாலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்லேன் செய்திதளம் மூலம் வெளியாகியுள்ள இது தொடர்பான படங்களில் சோதனை கார் முழுவதும் மறைக்கப்பட்டுள்ளது.

டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி காரின் அலாய் சக்கரங்கள் இப்படிதான் இருக்கும்போல!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்

இந்த ஸ்பை படங்களில் சோதனை எச்பிஎக்ஸ் கார் இரட்டை-நிற 15-இன்ச் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளது. இதே டிசைனில்தான் அலாய் சக்கரங்கள் இந்த எஸ்யூவியின் தயாரிப்பு வெர்சனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி காரின் அலாய் சக்கரங்கள் இப்படிதான் இருக்கும்போல!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்

இதற்கு முந்தைய ஸ்பை படங்களில் எச்பிஎக்ஸ்-இன் முன்பக்கம் கிட்டத்தட்ட ஹெரியரை ஒத்திருப்பதை பார்த்திருந்தோம். எச்பிஎக்ஸ் முன்பக்கத்தில் நெக்ஸானை போன்று 3-அம்பு டிசைனில் டாடாவின் ‘மனிதநேய லைன்' க்ரில் அமைப்பை பெற்று வரவுள்ளது.

டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி காரின் அலாய் சக்கரங்கள் இப்படிதான் இருக்கும்போல!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்

அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கை போன்று டாடா மோட்டார்ஸின் லேட்டஸ்ட் ஆல்ஃபா கட்டமைப்பில் தயாரிக்கப்பட்டுவரும் எச்பிஎக்ஸ் பிராண்டின் இம்பேக்ட் 2.0 டிசைன் தத்துவத்தை தொடரவுள்ளது. பரிணாம அளவுகளில் இந்த சோதனை மாதிரிகளை ஒப்பிடுகையில் இறுதியாக விற்பனைக்குவரும் இதன் விற்பனை மாடலின் உயரம் சற்று அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி காரின் அலாய் சக்கரங்கள் இப்படிதான் இருக்கும்போல!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் டாடா எச்பிஎக்ஸ் காரில் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.

டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி காரின் அலாய் சக்கரங்கள் இப்படிதான் இருக்கும்போல!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்

இந்த என்ஜின் உடன் 1.2 லிட்டர் ரெவோடார்க் டர்போ பெட்ரோல் என்ஜினும் இந்த காரின் விலைமிக்க வேரியண்ட்களில் வழங்கப்படலாம். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 102 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை பெற முடியும்.

டாடா எச்பிஎக்ஸ் எஸ்யூவி காரின் அலாய் சக்கரங்கள் இப்படிதான் இருக்கும்போல!! வெளிக்காட்டிய ஸ்பை படங்கள்

இவற்றுடன் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளது. ஹார்ன்பில் என்ற பெயரில் அறிமுகமாகக்கூடும் என கூறப்படும் இந்த டாடா எஸ்யூவி காரின் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை ரூ.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Tata HBX Small UV Dual Tone Alloys Detailed In New Spy Shots
Story first published: Thursday, December 10, 2020, 21:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X