டாடா எச்பிஎக்ஸ் மேனுவல் காரின் உட்புறம் இவ்வாறுதான் இருக்கும்!! 2021ல் விற்பனைக்கு வருகிறது
டாடா எச்பிஎக்ஸ் காரின் உட்புறம் புதிய ஸ்பை படங்களின் மூலமாக வெளிவந்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்திய சந்தையில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கிவரும் டாடா மோட்டார்ஸ் அடுத்த 2021ஆம் வருடத்தில் எச்பிஎக்ஸ் என்ற தற்காலிகமாக அழைக்கப்பட்டுவரும் புதிய மைக்ரோ-எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தவுள்ளது.

இதனால் இந்த கார் கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் சமீபத்தில் கூட இதன் சோதனையின்போது எடுக்கப்பட்ட சில ஸ்பை படங்கள் வெளியாகி இருந்தன.

இவை காரின் முன்பக்கத்தை தெளிவாக காட்டி இருந்தன. மெல்லியதான க்ரில், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் தாழ்வான ஹெட்லேம்ப்கள் உடன் உள்ள எச்பிஎக்ஸ் காரின் முன்பக்கம் விற்பனையில் உள்ள டாடா ஹெரியரை பெரிதும் ஒத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது எச்பிஎக்ஸ் காரின் உட்புறத்தை வெளிக்காட்டும் சில ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் மூலம் இந்த சோதனை எச்பிஎக்ஸ் கார் 5-ஸ்பீடு மேனுவல் வேரியண்ட் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

டேஸ்போர்டு, எச்பிஎக்ஸ் கான்செப்ட் மாடல் கொண்டிருந்ததை போன்று உள்ளது. அதேபோல் 3-ஸ்போக் தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரமும் கான்செப்ட் மாடலை ஒத்து காணப்படுகிறது. டேஸ்போர்டின் மையத்தில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் ஹெட்-யூனிட் உள்ளது.

டீம்பிஎச்பி செய்திதளத்தின் மூலம் கிடைத்துள்ள இந்த ஸ்பை படங்கள் ஸ்மார்ட்டான தோற்றத்தில் உள்ள அலாய் சக்கரங்களையும், நேர்த்தியான கண்ணீர்துளி வடிவிலான டெயில்லேம்ப்களையும் கூட வெளிக்காட்டுகின்றன.

டாடா எச்பிஎக்ஸ் காரில் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம் அதன் டாப் வேரியண்ட்கள் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் உடன் வழங்கப்படலாம்.

ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேவுகளாக வழங்கப்பட வாய்ப்புள்ளன. மஹிந்திரா கேயூவி100 நெக்ஸ்ட் மற்றும் மாருதி சுஸுகி இக்னிஸ் கார்களுக்கு போட்டியாக வெளிவரவுள்ள எச்பிஎக்ஸ் டாடாவின் ஆல்ஃபா கட்டமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








