ஆட்டோ எக்ஸ்போ2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ் ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்

டாடா நிறுவனம் இந்தியாவிற்கான புத்தம் புதிய மிகச்சிறிய எஸ்யூவி ரக காரான எச்பிஎக்ஸ் என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

இந்தியாவிற்கான வாகன கண்காட்சி உத்தரபிரேதச மாநிலம் கிரேட்டர் நொய்டா என்னும் நகரத்தில் நடைபெற்று வருகின்றது. இங்கு இந்திய நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களின் புதிய வாகனங்களைக் காட்சிப்படுத்தி வருகின்றன.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

அந்தவகையில், நாட்டின் ஜாம்பவான் என்று புகழைச்சூடியிருக்கும் டாடா நிறுவனமும் அதன் எதிர்கால தயாரிப்புகள் மற்றும் விரைவில் விற்பனைக்குக் கொண்டுவர உள்ள வாகனங்களைக் காட்சிப்படுத்தியுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

இதன்படி, டாடா எச்பிஎக்ஸ் என்ற மினி எஸ்யூவி ரக காரை அது தற்போது காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் டாடா நிறுவனம் தற்போது தயாரித்து வரும் எஸ்யூவி மாடல்களிலேயே மிக சிறிய உருவம் கொண்ட மாடலாகும்.

இந்த புதிய சிறிய ரக எஸ்யூவி காரை அதன் பிரபல தயாரிப்பான நெக்ஸான் மாடலுக்கு கீழே நிலை நிறுத்த இருக்கின்றது டாடா. இதனை உற்பத்தி செய்ய ஆல்ஃபா பிளாட்பாரத்தை டாடா பயன்படுத்தியுள்ளது. இதே பிளாட்பாரத்தைதான் அல்ட்ராஸ் காரை தயாரிக்கவும் அது பயன்படுத்தி வருகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

தற்போது இந்த கார் கான்செப்ட் மாடலாகவே அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இருப்பினும், மிக விரைவில் இந்த காரை உற்பத்திக்குக் கொண்டு செல்லவும் டாடா திட்டமிட்டிருக்கின்றது. இதனை நடப்பாண்டின் இறுதிக்குள்ளாகவே அந்நிறுவனம் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, மிக விரைவில் டாடா எச்பிஎக்ஸ் கார் சாலையில் பல பரீட்சையில் ஈடுபடுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

இந்த காரை இதற்கு முன்னதாக நடைபெற்ற (கடந்த ஆண்டு) ஆட்டோ எக்ஸ்போவிலும் டாடா காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தகுந்தது. அப்போது, எச்2எக்ஸ் என்ற கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, தற்போது உற்பத்திக்கான கான்செப்ட் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

இந்த கார் அதன் புகழ்வாய்ந்த ஹாரியர் எஸ்யூவி மாடலைத் தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. அதனை வெளிப்படுத்துகின்ற எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் முகப்பு காட்சியளிக்கின்றது.

தொடர்ந்து, ட்யூவல் எல்இடி ஹெட்லேம்ப், இதன் மேலே பொருத்தப்பட்ட டிஆர்எல்கள் உள்ளிட்டவை இந்த எச்பிஎக்ஸ் காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

இதுமட்டுமின்றி, எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி கார் அனைவரையும் கவர்கின்ற வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான அலங்காரங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஆர்ச்சுகளைப் போன்ற பெரிய சக்கரம், கட்டுமஸ்தான உடல்வாகு, ஃபோளிட்டிங் ரூஃப் உள்ளிட்டவை இந்த காருக்கு தனித்துவமான லுக்கை வழங்குகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

டாடாவின் புதுமுக தயாரிப்பில் அல்டுராஸ் மாடலில் என்ன பவர்ட்ரெயின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றதே அதேதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், புதிய எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியில் 1.2 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்விலும் கிடைக்கும்.

ஆனால், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகொண்ட எச்பிஎக்ஸ் வேரியண்ட் தனியாக வரும் காலத்திலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

அல்ட்ராஸ் காரில் பயன்படுத்தப்பட்டுள்ள எஞ்ஜினை இதில் பயன்படுத்தியிருந்தாலும் இது தனிப்பட்ட திறனை வெளிப்படுத்துகின்ற வகையில் அப்டேட்டைப் பெறும் என கூறப்படுகின்றது. ஆனால், அது குறித்த தகவல் வெளியாகியவில்லை.

இந்த எப்படி எஞ்ஜின் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தில் கவர்ச்சியானதாக காட்சியளிக்கின்றதோ அதேபோன்றுதான் கேபினிலும் அனைவரையும் கவர்கின்ற வகையில் உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

குறிப்பாக, இந்த காரின் அதிகபட்ச சிறப்பம்சங்கள் புதிய அல்ட்ராஸ் காரில் இடம்பெற்றிருப்பதைப் போன்ற காட்சியளிக்கின்றது. குறிப்பாக அல்ட்ராஸ் காரில் இடம்பெற்றிருக்கும் பெரிய அளவு டச் ஸ்கிரூன் இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம், மல்டிஃபங்க்சன் ஸ்டியரிங் வீல் மற்றும் நடுத்தரத்திலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் காணப்பட இருக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020: டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி அறிமுகம்.. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோவின் நேரடி போட்டியாளன்...

இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகுமானால் ரெனால்ட் க்விட், மாருதி சுஸூகி எஸ்-பிரஸ்ஸோ உள்ளிட்ட கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும்.

Most Read Articles

English summary
Auto Expo 2020: Tata HBX Mini-SUV Unveiled - Expected Launch Date, Prices, Specs & Images. Read In Tamil.
Story first published: Wednesday, February 5, 2020, 14:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X