டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

டாடா ஹார்ன்பில் மினி எஸ்யூவியில் கொடுக்கப்பட இருக்கும் எஞ்சின் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

எஸ்யூவி கார்களுக்கு இருக்கும் வரவேற்பை மனதில் வைத்து பல்வேறு ரக எஸ்யூவி கார்களை டாடா மோட்டார்ஸ் வரிசை கட்டி வருகிறது. டாடா நெக்ஸான், ஹாரியர், ஹெக்ஸா உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களை தொடர்ந்து விரைவில் ஹாரியர் 7 சீட்டர் மாடலையும், மினி எஸ்யூவி மாடலையும் களமிறக்க உள்ளது.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

இதில், மிக குறைவான பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் டாடா ஹார்ன்பில் என்ற மினி எஸ்யூவி வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

இந்த புதிய மினி எஸ்யூவி மாடல் அடுத்த மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

இந்த நிலையில், டாடா ஹார்ன்பில் எஸ்யூவியானது பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

டாடா டியாகோ காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த புதிய மினி எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த எஞ்சின் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் டியாகோ காரில் வழங்குகிறது. ஆனால், சில மாற்றங்களுடன் ஹார்ன்பில் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும்.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

ஹார்ன்பில் பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புதிய பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, டீசல் எஞ்சின் தேர்வு என்பது சந்தேகமாகவே தெரிவிக்கப்படுகிறது.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

டாடா ஹார்ன்பில் எஸ்யூவியானது 3,840 மிமீ நீளமும், 1,822 மிமீ அகலமும், 1,635 மிமீ உயரமும் பெற்றிருக்கிறது. இந்த கார் 2,450 மிமீ வீல் பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

டாடா ஹார்ன்பில் எஸ்யூவியின் டிசைன் மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் டிசைன் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

இந்த காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை எதிர்பார்க்கலாம்.

டாடா ஹார்ன்பில் எஸ்யூவி எஞ்சின் குறித்த முக்கிய விபரம்

புதிய டாடா ஹார்ன்பில் எஸ்யூவி ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளது. மஹிந்திரா கேயூவி100 மற்றும் மாருதி இக்னிஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Via- Team BHP

Most Read Articles

English summary
According to report, Tata Motors Mini SUV Hornbill is likely to be offered with a petrol engine only in India.
Story first published: Tuesday, January 7, 2020, 10:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X