ஹாரியர் மாடலில் புதிய பதிப்பு அறிமுகம்! இந்தியர்களை அதகளப்படுத்த டாடா அதிரடி.. விலை எவ்ளோ தெரியுமா?

டாடா நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த ஹாரியர் மாடலில் புதிய பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹாரியர் மாடலில் புதிய பதிப்பு அறிமுகம்... இந்தியர்களை அதகளப்படுத்த டாடா அதிரடி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்தியா வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் புகழ்வாய்ந்த ஹாரியர் எஸ்யூவி காரில் புதிய பதிப்பு ஒன்றை இந்தியிவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கேமோ எனும் பதிப்பையே அது தற்போது அறிமுகம் செய்துள்ளது. இது, எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் ஆகிய இரு தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும் என அது அறிவித்துள்ளது.

ஹாரியர் மாடலில் புதிய பதிப்பு அறிமுகம்... இந்தியர்களை அதகளப்படுத்த டாடா அதிரடி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதில், எக்ஸ்டி மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன், எக்ஸ்இசட் ஆட்டோமோட்டிக் டிரான்ஸ்மிஷனிலும் தேர்விலும் காட்சியளிக்கின்றது. டாடா நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி காராக ஹாரியர் இருக்கின்றது. இக்காரை கடந்த 2019ம் ஆண்டின் ஆரம்பத்தில்தான் இந்தியாவில் டாடா களமிறக்கியது. ஆரம்பத்தில் விற்பனையில் கெத்து காட்டிய இக்கார், புதுமுக வரவுகளால் விற்பனையில் பின் தங்கியது.

ஹாரியர் மாடலில் புதிய பதிப்பு அறிமுகம்... இந்தியர்களை அதகளப்படுத்த டாடா அதிரடி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்த நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைக்கு பின்னர் தற்போதே, 19 மாதங்களுக்கு பின்னர் நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்று வருகின்றது. இந்நிலையிலேயே ஹாரியரில் கேமோ எனும் எடிசனை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதுவிதமான நிற தேர்வு உள்ளிட்ட லேசான அலங்கரிப்புடன் இக்கார் விற்பனக்கு வந்திருக்கின்றது.

ஹாரியர் மாடலில் புதிய பதிப்பு அறிமுகம்... இந்தியர்களை அதகளப்படுத்த டாடா அதிரடி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

புதிய நிறமாக கேமோ பச்சை நிறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுவே இக்காருக்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றது. இதன் அலாய் வீலிலும் நிற மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, நெக்ஸான் கார்களில் காணப்படுதவைப் போன்று இந்த அலாய் வீல் காட்சியளிக்கின்றது. இத்துடன் கேமோ எனும் புதிய பேட்ஜ்கள் அதில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது ஓர் ஆர்17 பிளாக்ஸ்டோன் அலாய் வீல் ஆகும்.

ஹாரியர் மாடலில் புதிய பதிப்பு அறிமுகம்... இந்தியர்களை அதகளப்படுத்த டாடா அதிரடி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இதைத்தொடர்ந்து, காரின் உடற் பாகம் சிலவற்றில் ஸ்பெஷல் 'கேமோ' கிராஃபிக்குகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. மேலும், ரூஃப் ரெயில், மாஸ்காட் பான்னெட், பக்கவாட்டு பகுதியில் படிகட்டு, பார்க்கிங் சென்சார் உல்ளிட்ட வசதிகளும் இதில் வழங்கப்பட்டுள்ளன. இது மாதிரியான அக்ஸசெரீஸ்களை இரு விதமான பேக்கேஜ்களில் டாடா வழங்குகின்றது.

ஹாரியர் மாடலில் புதிய பதிப்பு அறிமுகம்... இந்தியர்களை அதகளப்படுத்த டாடா அதிரடி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

அதாவது, டாடா ஹாரியர் கேமோ தேர்வைக் கூடுதல் சிறப்பானதாக மாற்றும் நோக்கில் கேமோ ஸ்டீல்த் மற்றும் கேமோ ஸ்டீல்த் பிளஸ் ஆகியவற்றை வழங்குகின்றது. இது ரூ. 26.999 என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதைத்தொடர்ந்து வழக்கமான ஹாரியரில் இருந்து மாறுபட்டு காணப்படும் விதமாக இக்காரின் கூடுதல் சில மாற்றங்களையும் டாடா செய்துள்ளது.

ஹாரியர் மாடலில் புதிய பதிப்பு அறிமுகம்... இந்தியர்களை அதகளப்படுத்த டாடா அதிரடி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

அந்தவகையில், கருங்கல் நிறம் இதன் டேஷ்போர்டிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று காரின் இருக்கைக்கு கருங்கல் நிறத்திலான கலிக்கோ லெதரும், இதனை பச்சை நிற நூலால் தைத்தும் வழங்குகின்றது. இத்துடன், உட்புறத்தின் பெரும்பாலான அம்சங்களை துப்பாக்கி உலோகத்தின் நிறத்தை வழங்கியிருக்கின்றது டாடா.

ஹாரியர் மாடலில் புதிய பதிப்பு அறிமுகம்... இந்தியர்களை அதகளப்படுத்த டாடா அதிரடி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இந்த காரில் ஃபியட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜினை டாடா வழங்குகின்றது. இது, அதிகபட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது. இது, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இயங்கும். இது தவிர, தொழில்நுட்ப வசதியாக ஆப்பிள் மற்றும் ஆட்டோ ஆண்ட்ராய்டு வசதிக் கொண்ட 7 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட், நடு தரத்திலான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஹாரியர் மாடலில் புதிய பதிப்பு அறிமுகம்... இந்தியர்களை அதகளப்படுத்த டாடா அதிரடி... இதோட விலை எவ்ளோ தெரியுமா?

இத்துடன், பாதுகாப்பு வசதியாக ஆறு ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், கார்னர் ஸ்டேபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் டிராக்சன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டெசன்ட் கன்ட்ரோல், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் கேமிரா உள்ளிட்ட எக்கச்சக்க அம்சங்கள் இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய பல்வேறு வசதிகளைக் கொண்ட இக்காருக்கு ரூ. 16.50 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

English summary
Tata Launches Harrier Camo Edition In India. Read In Tamil.
Story first published: Friday, November 6, 2020, 14:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X