பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய டாடா அல்ட்ராஸ் காரின் ஜேடிபி மாடலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் என்ற புதிய பிரிமீயம் ஹேட்ச்பேக் காரை வரும் 22ந் தேதி விற்பனைக்கு கெண்டு வர இருக்கிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களின் சந்தையை குறிவைத்து இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

மிக ஸ்டைலான தோற்றம், நவீன தொழில்நுட்ப அம்சங்கள், அதிக இடவசதி மற்றும் பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளுடன் மிக சரியான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், புதிய கார் வாங்குவோரின் தேர்வு பட்டியலிலும் இந்த கார் இடம்பெற்றிருக்கிறது.

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

புதிய டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்பட இருக்கின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

இந்த காரின் பெட்ரோல், டீசல் எஞ்சின்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு கொடுக்கப்பட இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு சிறிது காலம் கழித்து அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷனும் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஜேடிபி மாடல் போன்றே, அல்ட்ராஸ் ஜேடிபி பெயரில் புதிய மாடல் வருவதற்கான சாத்தியம் உள்ளது.

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

டாடா அல்ட்ராஸ் காரின் ஜேடிபி மாடலில் இருக்கும் டீசல் எஞ்சின் 110 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் பெற்றிருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் எதிர்பார்க்கலாம் என்று அந்த தகவல் கூறுகிறது.

MOST READ: பைக் வேண்டாம் என நடுரோட்டில் தீ வைத்து கொளுத்திய இளைஞர்... காரணம் தெரிஞ்சா கோவப்படுவீங்க...

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

டாடா டியாகோ, டிகோர் ஜேடிபி மாடல்களை போன்றே, அல்ட்ராஸ் ஜேடிபி மாடலில் ஏராளமான கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் கவர்ச்சிகரமான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

MOST READ: இந்தியர்கள் எதிர்பார்ப்பு வீணாகாது.. உலகின் மிகவும் மலிவான மின்சார கார் விரைவில் அறிமுகம்.. எப்போது?

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

உட்புறத்திலும் விசேஷ அலங்கார அம்சங்கள் கொடுக்கப்பட்டு வேறுப்படுத்தப்பட்டு இருக்கும். அல்ட்ராஸ் ஜேடிபி மாடலானது பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் தனித்துவமான தேர்வாக அமையும்.

MOST READ: ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் வாங்கிய சொகுசு கார்.. அடேங்கப்பா இதுக்கா இவ்ளோ தொகை கொடுத்து வாங்கினாங்க?

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

புதிய டாடா அல்ட்ராஸ் ஜேடிபி காரின் சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டீயரிங் சிஸ்டத்திலும் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் செய்யப்பட்டு வரும் என்று தெரிகிறது.

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

சாதாரண அல்ட்ராஸ் காருக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இதுகுறித்து முடிவு செய்ய டாடா திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிற்பாதியில் அல்ட்ராஸ் ஜேடிபி மாடல் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.

பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் காரும் அறிமுகமாக வாய்ப்பு!

பவர்ஃபுல் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மதிப்புமிக்க தேர்வாக டாடா அல்ட்ராஸ் ஜேடிபி மாடல் நிலைநிறுத்தப்படும். இதனால், இந்த மாடல் குறித்த செய்தி, பெர்ஃபார்மென்ஸ் கார் விரும்பிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

Source: Team BHP

Most Read Articles

English summary
According to report, Tata Motors May considering to launch Altroz JTP version some later in Indian market.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X