டாடா அதிரடியால் இந்திய வாகன சந்தை வியப்பு... தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் சலுகைகள் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் டாடா நிறுவனம் அதிரடியாக சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடாவின் அறிவிப்பால் இந்தியா வாகன சந்தை வியப்பு... தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் சலுகைகள் அறிவிப்பு...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வாரி வழங்கின. இந்த பண்டிகைத் திருநாள் முடிவடைந்துவிட்டநிலையில் தற்போது வழக்கம்போல் வாகனங்கள் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன.

டாடாவின் அறிவிப்பால் இந்தியா வாகன சந்தை வியப்பு... தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் சலுகைகள் அறிவிப்பு...

இந்த நிலையில், இந்தியாவின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தீபாவளிக்கு பின்னரும் மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. 'இந்தியாவிற்கான இரண்டாம் தீபாவளி' என்ற பெயரில் சிறப்பு சலுகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

டாடாவின் அறிவிப்பால் இந்தியா வாகன சந்தை வியப்பு... தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் சலுகைகள் அறிவிப்பு...

இது டாடா நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. ஆம், டாடாவின் மினி வேன்கள் மற்றும் பிக்-அப் டிரக் ஆகிய வர்த்தக ரீதியாக இயங்கக்கூடிய வாகனங்களுக்காக மட்டுமே சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டாடாவின் அறிவிப்பால் இந்தியா வாகன சந்தை வியப்பு... தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் சலுகைகள் அறிவிப்பு...

குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் டாடா ஏஸ், டாடா யோதா மற்றும் டாடா இன்ட்ரா ஆகிய சிறிய ரக வர்த்தக வாகனங்களுக்காக மட்டுமே இச்சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கே நிச்சய பரிசு மற்றும் லக்கி டிராவ் போட்டிக்கான கூப்பன் வழங்கப்பட இருக்கின்றது.

டாடாவின் அறிவிப்பால் இந்தியா வாகன சந்தை வியப்பு... தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் சலுகைகள் அறிவிப்பு...

இதன் மூலம் எக்கச்சக்க பம்பர் பரிசுகளை டாடா வழங்க உள்ளது. இது நவம்பர் மாதத்திற்கான சலுகையாகும். ஆகையால், இந்த மாதத்தில் மேற்கூறிய மாடலில் ஏதேனும் ஒன்றின் புதிய வாகனத்தை வாங்குவோருக்கு ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்கம் முதல் பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.

டாடாவின் அறிவிப்பால் இந்தியா வாகன சந்தை வியப்பு... தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் சலுகைகள் அறிவிப்பு...

எல்இடி தொலைக்காட்சி, வாஷிங்மெஷின், ஸ்மார்ட்போன், எரிபொருள் வவுச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பரிசாக லக்கி டிராவ் போட்டியின் மூலம் வழங்கப்பட இருக்கின்றன. இந்த சலுகை நவம்பர் 30ம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சலுகையை டாடா திடீரென அறிவிக்க ஓர் காரணம் இருக்கின்றது.

டாடாவின் அறிவிப்பால் இந்தியா வாகன சந்தை வியப்பு... தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் சலுகைகள் அறிவிப்பு...

டாடா மோட்டார்ஸ், ஏஸ் மினி வேனை அறிமுகப்படுத்தி விரைவில் 15 வருடங்கள் ஆக இருக்கின்றன. இது, டாடா மோட்டார்ஸுக்கு இந்திய நல்ல வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது. எனவேதான் இதன் 15ம் வருடத்தை நினைவுகூறும் விதமாகவும் டாடா இந்த சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தின் மூலம் 22 லட்சம் இந்தியர்கள் பயனடைந்து வருகின்றனர்.

டாடாவின் அறிவிப்பால் இந்தியா வாகன சந்தை வியப்பு... தீபாவளி பண்டிகை முடிவுற்ற நிலையில் சலுகைகள் அறிவிப்பு...

டாடா நிறுவனம், அதன் கார்களைப் போலவே வர்த்தக வாகனங்களையும் பிஎஸ் 6 தரத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்தவகையில், பிஎஸ்6 தரத்திலேயே இந்த சிறிய ரக வர்த்தக வாகனங்களும் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு இது வரை 50,000 யூனிட் வாகனங்கள் நாட்டில் விற்பனைச் செய்யப்பட்டிருக்கின்றன.

Most Read Articles

English summary
Tata Motors Commercial Vehicle Offers In November 2020: Assured Gifts, Lucky Draw & More. Read In Tamil.
Story first published: Thursday, November 19, 2020, 17:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X