சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா?

இந்தியாவை தொடர்ந்து பெருமைப்படுத்தி வரும் டாடா மோட்டார்ஸ், மகத்தான சாதனை ஒன்றை படைத்துள்ளது.

சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பாதுகாப்பான கார்களை தயாரித்து வருகிறது. பாதுகாப்பு என்ற விஷயத்தில் டாடா நிறுவனத்தின் கார்கள் இந்தியாவிற்கு பல முறை பெருமை தேடி கொடுத்துள்ளன. பாதுகாப்பை மனதில் வைத்து டாடா கார்களை வாங்குபவர்கள் ஏராளம். இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த டாடா நிறுவனம் புதிய மைல்கல் ஒன்றை தற்போது எட்டியுள்ளது.

சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா?

ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 40 லட்சம் பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இந்த தகவலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று (அக்டோபர் 24ம் தேதி) வெளியிட்டது. பயணிகள் வாகனங்களை பொறுத்தவரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு சியாரா (Tata Sierra).

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா?

எஸ்யூவி ரக காரான டாடா சியாரா கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அப்போதில் இருந்து தற்போது வரை ஒட்டுமொத்தமாக 40 லட்சம் பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்து டாடா மோட்டார்ஸ் சாதனை படைத்துள்ளது. இந்த மைல்கல்லை எட்டுவதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 3 தசாப்தங்களை, அதாவது சுமார் 30 ஆண்டுகளை எடுத்து கொண்டுள்ளது.

சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா?

இடைப்பட்ட ஆண்டுகளில் சியாரா, இண்டிகா, சுமோ, சஃபாரி என பல்வேறு தயாரிப்புகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்துள்ளது. இந்த கார்கள் இன்று விற்பனையில் இல்லாவிட்டாலும், காலத்தால் அழியாத காவியங்களாக, இந்திய மக்களின் மனதில் அவற்றின் நினைவு என்றென்றும் நிலைத்து நிற்கும்.

சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா?

இதுதவிர நானோ காரையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'மக்களின் கார்' என்ற அடைமொழியுடனும், உலகின் விலை குறைவான கார் என்ற பெருமையுடனும் விற்பனைக்கு வந்த டாடா நானோ படுதோல்வியை சந்தித்தாலும், டாடா எடுத்த இந்த துணிச்சலான முயற்சி உலகையே திரும்பி பார்க்க வைத்தது என்பதை அவ்வளவு எளிதாக மறுத்து விட முடியாது.

சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா?

ரத்தன் டாடாவின் கனவு காரான டாடா நானோ பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும், இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு சொந்த கார் என்ற இலக்கை அடைய வேண்டும் அவர் எடுத்த முயற்சிகள் நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவை. 10 லட்சம் பயணிகள் வாகனங்கள் உற்பத்தி என்ற மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2005-06ம் ஆண்டில் எட்டியது.

சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா?

இதன்பின் 30 லட்சம் பயணிகள் வாகனங்கள் உற்பத்தி என்ற மைல்கல் கடந்த 2015ம் ஆண்டு எட்டப்பட்டது. அடுத்த ஐந்தே ஆண்டுகளில் தற்போது 40 லட்சம் என்ற மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் கடந்துள்ளது. இன்னும் 10 லட்சம் பயணிகள் வாகனங்களை உற்பத்தி செய்தால், 50 லட்சம் என்ற மைல்கல்லை டாடா மோட்டார்ஸ் கடக்கும்.

சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா?

டாடா கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், 50 லட்சம் என்ற மைல்கல் வெகு விரைவாக எட்டப்படும் என நம்பலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் நெக்ஸான், அல்ட்ராஸ், ஹாரியர் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இதுதவிர நெக்ஸான் எலெக்ட்ரிக் காரும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சத்தமே இல்லாமல் டாடா செய்த மகத்தான சம்பவம்... ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்படணும்... என்னனு தெரியுமா?

இதில், டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்தான், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்ற முதல் இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளது.

Most Read Articles

English summary
Tata Motors Crosses 40 Lakh Passenger Vehicle Production Milestone. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X