Just In
- 32 min ago
புல்லட் மீது ரொம்ப ஆசை! மனைவியுடன் பயணிக்க 3 சக்கர வாகனமாக மாற்றிய முதியவர்... இதற்கான செலவு எவ்வளவு தெரியுமா?
- 48 min ago
201 பிஎச்பி-யில் இயங்கும் ஐ20என் காரை கொண்டுவரும் ஹூண்டாய்!! இந்திய சாலைகள் தாங்குமா?!
- 56 min ago
இந்த மாநிலத்திற்குத்தான் டெஸ்லா கார் ஆலை 'ஜாக்பாட்'... பரபரப்பு தகவல்கள்!
- 2 hrs ago
இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் பட்டியலில் சிட்ரோன் பட்ஜெட் எஸ்யூவி கார்... சொனெட் போட்டியாளர்!
Don't Miss!
- Movies
காதலியை கரம்பிடித்த வருண் தவான்.. பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்க களைக்கட்டிய திருமணம்!
- News
'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்
- Finance
வெறும் 1 டாலருக்கு கூகிள், ஆப்பிள் பங்குகளை வாங்கலாம்.இந்திய முதலீட்டாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு.!
- Sports
கோலி என்கிட்ட கோப்பையை கொடுத்ததும் கண் கலங்கிட்டேன்... நடராஜன் நெகிழ்ச்சி
- Lifestyle
ரொம்ப குண்டா இருக்கீங்களா? அப்ப உங்க உடல் எடையை குறைக்க இந்த டீயை குடிங்க போதும்...!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெரிய காற்றடைக்கப்பட்ட பலூனிற்குள் காட்சியளித்த டாடா கார்... இப்படி ஒரு பாதுகாப்பு வசதியை இதுவர யாருமே கொடுக்கல...
டாடா கார் பெரிய காற்றடைக்கப்பட்ட பை-யிற்குள் வைத்து டெலிவரிக் கொடுக்கப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போதும் நீடித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், மக்களை பாதுகாப்பாக இருக்கும் அரசு வலியுறுத்தி வருகின்றது. குறிப்பாக, பொதுவெளியில் இருக்கும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்துடன், பல்வேறு பாதுகாப்பு வழிநடத்தல்களை அது அறிவித்த வண்ணம் இருக்கின்றது.

பல விதமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் வைரசின் தீவிரம் தற்போதும் ஆயிரக் கணக்கில் காட்சியளிக்கின்றது. இந்த நிலையில், தங்களின் வாடிக்கையாளர்களை வைரஸ் பரவலில் இருந்து பாதுகாக்கும் விதமாக புதிய டெலிவரி முறையை டாடா அறிமுகப்படுத்தியுள்ளது. ஆமாங்க டாடா கார் காற்றடைக்கப்பட்ட பலூனில் நிறுத்தி வைக்கப்படுவதற்கு, வைரஸ் அண்டாமல் இருக்க வேண்டும் என்பதே காரணம் ஆகும்.

டாடாவின் இந்த நடவடிக்கையை இதுவரை எந்தவொரு நிறுவனம் இந்தியாவில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய வாகனங்களை டெலிவரிக் கொடுக்க வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல விதமான புதிய நடைமுறைகளைக் கையாண்டு வருகின்றன. அந்தவகையில், தொடர்பில்லா டெலிவரி, கிருமி நாசினி கொண்டு வாகனங்களைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே டாடா நிறுவனம் முற்றிலும் விநோதமான முயற்சியில் இறங்கியிருக்கின்றது. புதிய காரை டெலிவரிக்கு வழங்கப்படுவதற்கு முன்னர், கார் முதலில் கிருமி நாசினிக்கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றது. இதையடுத்தே கார் ஓர் மிகப்பெரிய பலூன் போன்ற கண்ணாடி பைக்குள் நிறுத்தப்படுகின்றது. இதன் பின்னர், அந்த பையில் காற்றடிக்கப்பட்டு அடைக்கப்படுகின்றது.

இந்த பலூன் சிறு தூசியைக்கூட காரின் பக்கம் நெருங்க விடாமல் பாதுகாப்பு வளையமாக செயல்படும். மேலும், புதிய காரை டெலிவரி எடுப்போரும் எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி காரை பயன்படுத்த முடியும். குறிப்பாக, டாடாவின் இந்த முயற்சியால் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான பயமுமின்றி கார்களை தைரியமாக அணுக முடியும்.

தற்போது சமூக வலைதளங்களில் காற்று நிரப்பட்ட பலூனில் டாடா டியாகோ கார் இருப்பதைப் போன்று காட்சிகள் வெளியாகியுள்ளன. இத்துடன், காரை புக் செய்த வாடிக்கையாளர்கள் டெலிவரி பெறுவது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன. இதுகுறித்த புகைப்படங்களே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நாட்டின் பாதுகாப்பான கார்களில் டியாகோவும் ஒன்று. இது ஒரு ஹேட்ச்பேக் காராகும். இது நான்கு நட்சத்திர பாதுகாப்பு திறன் கொண்ட என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் 1.2 லிட்டர், நேச்சுரலி அஸ்பையர்ட் பெட்ரோல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரை மற்றும் 113 என்எம் டார்க் திறனையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய வேகக்கட்டுப்பாட்டுகளுடன் இக்கார் கிடைக்கின்றது.

டாடா நிறுவனம், பாதுகாப்பான கார்களை மட்டுமின்றி கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு கவசங்களையும்கூட விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதனடிப்படையில், காற்று வடிக்கட்டி, காற்று சுத்திகரிப்பான், முகக் கவசம், கிருமி நாசினி, என்95 ரக மாஸ்க், கையுறைகள், தூசியை அகற்றும் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அது அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தகுந்தது.