ஆஹா இதுவல்லவா டிரக்... டாடாவின் புதிய அல்ட்ரா டி.7 டிரக் இந்தியாவில் அறிமுகம்! என்னென்ன வசதிகள் உள்ளன?

ஆஹா இதுவல்லவா டிரக் என்று கூறுமளவிற்கு பல்வேறு சிறப்பு வசதிகளுடன் டாடாவின் புதிய அல்ட்ரா டி.7 டிரக் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஆஹா இதுவல்லவா டிரக்... டாடாவின் புதிய அல்ட்ரா டி.7 டிரக் இந்தியாவில் அறிமுகம்! என்னென்ன வசதிகள் உள்ளன?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ரா டி.7 எனும் புதுமுக டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற பிரத்யேக வசதிகளுடன் இதனை டாடா உருவாக்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி மிக அட்வான்ஸ்ட் தொழில்நுட்ப வசதியுடன் இந்த இலகு ரக வர்த்தக வாகனத்தை உருவாக்கியிருப்பதாக டாடா தகவல் வெளியிட்டுள்ளது.

ஆஹா இதுவல்லவா டிரக்... டாடாவின் புதிய அல்ட்ரா டி.7 டிரக் இந்தியாவில் அறிமுகம்! என்னென்ன வசதிகள் உள்ளன?

ஆகையால், நாட்டில் தற்போது விற்பனையில் இருக்கும் வர்த்தக வாகனங்களிலேயே மிகவும் சிறப்பு திறன் கொண்ட டிரக்காக இது உருவெடுத்துள்ளது. இதன் டிரைவர் கேபின் பகுதி மிகவும் நேர்த்தியானதாக காட்சியளிக்கின்றது. இதுவே, டாடா நிறுவனம் இந்த காரை மிகவும் சிறப்பான தயாரிப்பாக உருவாக்கியிருப்பதற்கு சான்றாக இருக்கின்றது.

ஆஹா இதுவல்லவா டிரக்... டாடாவின் புதிய அல்ட்ரா டி.7 டிரக் இந்தியாவில் அறிமுகம்! என்னென்ன வசதிகள் உள்ளன?

இந்த கேபின் பிற டிரக்குகளைக் காட்டிலும் 1,900 மிமீ அகலம் கொண்டதாக காட்சியளிக்கின்றது. இது அதிக சொகுசு வசதியை வழங்க உதவும். தொடர்ந்து, பயனருக்கு அதிக லாபத்தைக் கொடுக்கக்கூடிய வகையில் பரந்த இடவசதியைக் கொண்டதாக இதன் கேரியர் பகுதி இருக்கின்றது. ஆமாங்க, கூடுதல் சரக்குகளை ஏற்றிச் செல்கின்ற வகையில் லாரியின் பின் பகுதி இருக்கின்றது.

ஆஹா இதுவல்லவா டிரக்... டாடாவின் புதிய அல்ட்ரா டி.7 டிரக் இந்தியாவில் அறிமுகம்! என்னென்ன வசதிகள் உள்ளன?

தொடர்ந்து, இதன் சேஸிஸ்க்கு பிரத்யேக மாடுலர் டிசைன் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது விற்பனையில் இருக்கும் பிற வர்த்தக வாகனங்களைக் காட்டிலும் இது தனிச் சிறப்புக் கொண்டதாகவே காட்சியளிக்கின்றது. 4 டயர்கள் மற்றும் 6 டயர்கள் தேர்வில் இந்த டிரக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆஹா இதுவல்லவா டிரக்... டாடாவின் புதிய அல்ட்ரா டி.7 டிரக் இந்தியாவில் அறிமுகம்! என்னென்ன வசதிகள் உள்ளன?

இது புதிய டிரக்கை சொந்தமாக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. டாடா நிறுவனம் அல்ட்ரா டி.7 டிரக்கில் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட 4எஸ்பிசிஆர் எஞ்ஜினையே பயன்படுத்தியுள்ளது. இது அதிகபட்சமாக 100 பிஎச்பி மற்றும் 300 என்எம் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது.

ஆஹா இதுவல்லவா டிரக்... டாடாவின் புதிய அல்ட்ரா டி.7 டிரக் இந்தியாவில் அறிமுகம்! என்னென்ன வசதிகள் உள்ளன?

பிஎஸ்6 தரத்திலான இந்த எஞ்ஜின் எரிபொருள் சிக்கனத்தை வழங்கக்கூடியது. இதுமட்டுமின்றி, டிரக்கில் ஏர் பிரக், மியூசிக் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், எல்இடி தரத்திலான மின் விளக்குகள் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வசதி மற்றும் கிராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தப்பட்ட கேபின் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவேதான் இந்த டிரக்கை பிற டிரக்குகளைக் காட்டிலும் அதிக சிறப்பு வாய்ந்தத குறிப்பிடப்படுகின்றது.

Most Read Articles
English summary
Tata Motors Launched Ultra T.7 Truck In India. Read In Tamil.
Story first published: Wednesday, December 23, 2020, 19:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X