அசத்தும் புதிய அம்சங்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் அறிமுகம்!

வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், அசத்தலான சிறப்பம்சங்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் விற்பைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அசத்தும் புதிய அம்சங்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்!

வாடிக்கையாளர் விரும்பும் வசதிகளை தனது கார்களில் கொடுப்பதற்கான முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. அண்மையில் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் சன்ரூஃப் வசதி கொண்ட புதிய வேரியண்ட்டை மிக சவாலான விலையில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, தற்போது ஹாரியர் எஸ்யூவியிலும் அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய வேரியண்ட்டை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

அசத்தும் புதிய அம்சங்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்!

டாடா ஹாரியர் XT+ என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய வேரியண்ட்டில் பனோரமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது. அத்துடன், டியூவல் ஃபங்ஷன் எல்இடி பகல்நேர விளக்குகள், 17 அங்குல அலாய் வீல்கள், ஃப்ளோட்டிங் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஆடியோ சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

அசத்தும் புதிய அம்சங்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்!

இதுதவிர்த்து, இந்த புதிய டாடா ஹாரியர் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், இரண்டு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், பனி விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

அசத்தும் புதிய அம்சங்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்!

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர் விவேக் ஸ்ரீவத்சா கூறுகையில்,"எங்களது தயாரிப்புகளின் மதிப்பை அதிகரிக்கும் விதத்தில் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தி வருகிறோம். அந்த வகையில், ஹாரியர் எஸ்யூவியின் புதிய எக்ஸ்டி ப்ளஸ் வேரியண்ட் கவர்ச்சிகரமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு அதிக மதிப்பை வழங்கும்," என்று தெரிவித்துள்ளார்.

அசத்தும் புதிய அம்சங்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் இந்த புதிய எக்ஸ்டி ப்ளஸ் வேரியண்ட் கிடைக்கும்.

அசத்தும் புதிய அம்சங்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்!

புதிய டாடா ஹாரியர் எக்ஸ்டி ப்ளஸ் வேரியண்ட்டிற்கு ரூ.16.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது அறிமுகச் சலுகை விலையாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாதம் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த விலை பொருந்தும். அடுத்த மாதம் முதல் விலை அதிகரிக்கப்படும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக அமையும்.

அசத்தும் புதிய அம்சங்களுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் புதிய வேரியண்ட்!

டாடா ஹாரியர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டு 15 மாதங்கள் ஆகும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் 1,694 ஹாரியர் எஸ்யூவிகள் விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Motors has launched the new XT+ variant in Harrier SUV and priced at Rs.16.99 Lakhs (ex-showroom Delhi).
Story first published: Friday, September 4, 2020, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X