பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் மக்கள்... எகிறியது டாடா கார்களின் விற்பனை... பிரம்மாண்ட வளர்ச்சி...

இந்தியாவில் டாடா கார்களின் விற்பனை பிரம்மாண்ட வளர்ச்சியை சந்தித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் மக்கள்... எகிறியது டாடா கார்களின் விற்பனை... பிரம்மாண்ட வளர்ச்சி...

இந்தியாவில் தற்போது டாடா நிறுவனத்தின் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த நவம்பர் மாதம் டாடா நிறுவனம் 21,600 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய அக்டோபர் மாதத்தில் டாடா நிறுவனம் 23,600 கார்களை விற்பனை செய்திருந்தது.

பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் மக்கள்... எகிறியது டாடா கார்களின் விற்பனை... பிரம்மாண்ட வளர்ச்சி...

நடப்பாண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டால் நவம்பர் மாதம் டாடா நிறுவனத்தின் கார்கள் விற்பனையில் சுமார் 8 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிட்டால், டாடா நிறுவன கார்களின் விற்பனை பிரம்மாண்ட வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏனெனில் கடந்தாண்டு நவம்பர் மாதம் டாடா நிறுவனம் 10,400 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் மக்கள்... எகிறியது டாடா கார்களின் விற்பனை... பிரம்மாண்ட வளர்ச்சி...

இதன் மூலம் கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு நவம்பரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 108 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான ஒரு வளர்ச்சி என்பதில் சந்தேகமில்லை. மார்க்கெட் ஷேர் என்ற அளவில் பார்த்தல், இந்திய பயணிகள் வாகன சந்தையில், டாடா நிறுவனம் தற்போது 7.5 சதவீத சந்தை பங்கை கொண்டுள்ளது.

பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் மக்கள்... எகிறியது டாடா கார்களின் விற்பனை... பிரம்மாண்ட வளர்ச்சி...

அத்துடன் மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெறும் 4 சதவீத சந்தை பங்கை மட்டுமே கொண்டிருந்தது. அத்துடன் விற்பனை பட்டியலில், மாருதி, ஹூண்டாய், மஹிந்திரா, கியா மற்றும் ரெனால்ட் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு 6வது இடத்தில் இருந்தது.

பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் மக்கள்... எகிறியது டாடா கார்களின் விற்பனை... பிரம்மாண்ட வளர்ச்சி...

ஆனால் தற்போது வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் கார் பிராண்டுகளில் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் மாறியுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கார்களின் பாதுகாப்பு தொடர்பாக வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் விழிப்புணர்வு இதற்கு முக்கியமான காரணமாக இருக்கலாம்.

பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் மக்கள்... எகிறியது டாடா கார்களின் விற்பனை... பிரம்மாண்ட வளர்ச்சி...

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தும் மோதல் சோதனைகளில், டாடா நிறுவனத்தின் கார்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. டாடா நிறுவனத்தின் நெக்ஸான் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் ஆகிய 2 கார்களும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளன.

பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் மக்கள்... எகிறியது டாடா கார்களின் விற்பனை... பிரம்மாண்ட வளர்ச்சி...

இதன் மூலம் குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற 2 கார்களை விற்பனை செய்யும் ஒரே இந்திய நிறுவனமாக டாடா உருவெடுத்துள்ளது. அத்துடன் டாடா நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 4 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன.

பாதுகாப்பிற்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் மக்கள்... எகிறியது டாடா கார்களின் விற்பனை... பிரம்மாண்ட வளர்ச்சி...

இந்தியாவில் தற்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். இது டாடா நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்திருக்கலாம். டாடா நிறுவனத்தின் டியாகோ, நெக்ஸான், ஹாரியர் உள்ளிட்ட கார்கள் விபத்துக்களில் இருந்து பயணிகளை பல முறை சிறு காயம் கூட இல்லாமல் காப்பாற்றியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 1, 2020, 17:08 [IST]
English summary
Tata Motors November 2020 Sales Up by 108 Per cent - Details. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+