டியாகோவில் புதிதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... சந்தையை விரிவுப்படுத்தும் டாடா...

டாடா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் ரக மாடலான டியாகோவின் டர்போ பெட்ரோல் வேரியண்ட் முதன்முறையாக இந்திய சாலையில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

டியாகோவில் புதிதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... சந்தையை விரிவுப்படுத்தும் டாடா...

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸ், அதன் விற்பனை மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகிறது.

டியாகோவில் புதிதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... சந்தையை விரிவுப்படுத்தும் டாடா...

இதனால் தான் நிறுவனத்தின் அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் ஹெரியர் எஸ்யூவி உள்ளிட்டவை விரைவில் சில அப்கிரேட்களுடனும் புதிய என்ஜின் தேர்வுகளுடனும் அறிமுகமாகவுள்ளன. இன்னும் தெளிவாக சொல்ல வேண்மென்றால், மேற்கூறப்பட்டுள்ள இரு மாடல்களும் விரைவில் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனையை தொடரவுள்ளன.

டியாகோவில் புதிதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... சந்தையை விரிவுப்படுத்தும் டாடா...

இந்த வகையில் தான் தற்போது புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் டியாகோ மாடல் முதன்முறையாக சோதனையின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களுரில் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இந்த காரின் ஸ்பை படங்களை டீம்-பிஎச்பி செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

டியாகோவில் புதிதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... சந்தையை விரிவுப்படுத்தும் டாடா...

மற்றப்படி புதிய டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் குறித்த விபரங்கள் அனைத்தும் இரகசியமாகவே உள்ளன. ஆனால் இந்த என்ஜின் 1.2 லிட்டர் அளவில் 3-சிலிண்டர் அமைப்பை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்படி பார்த்தோமேயானால், இந்த புதிய என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 141 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

டியாகோவில் புதிதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... சந்தையை விரிவுப்படுத்தும் டாடா...

அடையாளம் காணப்பட்டுள்ள சோதனை டியாகோ காரில் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனையில் உள்ள டியாகோவில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பெட்ரோல் என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 86 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை பெற முடியும். தோற்ற அளவில் டாடா டியாகோவின் புதிய டர்போ பெட்ரோல் மாடல், இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகமான டியாகோ ஃபேஸ்லிஃப்ட்டை ஒத்து காணப்படும்.

டியாகோவில் புதிதாக டர்போ பெட்ரோல் என்ஜின்... சந்தையை விரிவுப்படுத்தும் டாடா...

முந்தைய தலைமுறை டியாகோவில் இருந்து முன்புறத்தில் மட்டும் சிறிது தோற்ற மாறுதல்களுடன் வெளிவந்த டியாகோ ஃபேஸ்லிஃப்ட்டில் முக்கிய அம்சங்களாக 7.0 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஹர்மன் ஆடியோ சிஸ்டம், ட்ரைவ் மோட்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் மூலமாக கட்டுப்படுத்தக்கூடிய பக்கவாட்டில் உள்ள பின்புறம் பார்க்கும் கண்ணாடிகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles

English summary
Tata Tiago Turbo-Petrol Model Spotted For The First Time
Story first published: Tuesday, August 18, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X