டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்!

டாடா க்ராவிட்டாஸ் 6 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படுவது குறித்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்!

இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா ஹாரியர் எஸ்யூவி மிக முக்கிய தேர்வுகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவிக்கு சிறந்த மாற்றுத் தேர்வாகவும் உள்ளது. பிரம்மாண்ட தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வு, போதுமான வசதிகளுடன் மிகச் சரியான பட்ஜெட்டில் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்!

இந்த நிலையில், டாடா ஹாரியர் அடிப்படையிலான 6 சீட்டர் மாடலாக டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியா ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. அப்போதே இந்த எஸ்யூவி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்!

இந்த ஆண்டு மத்தியில் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா பிரச்னை காரணமாக, இந்த எஸ்யூவியின் அறிமுகத்தை டாடா மோட்டார்ஸ் ஒத்தி வைத்தது. அண்மையில் வந்த தகவலின்படி, பண்டிகை கால ரிலீஸ் பட்டியலில் இந்த புதிய மாடல் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்!

ஆனால், தற்போது டைம்ஸ்நவ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கிறது. கொரோனா பிரச்னை தொடர்ந்து அதிகரித்து வருவதே தள்ளிப்போடுவதற்கான காரணம்.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் அடிப்படையிலான மாடல் என்பதால், முகப்பில் அதிக ஒற்றுமை உண்டு. ஆனால், மூன்றாவது வரிசை இருக்கை அமைப்பிற்காக பக்கவாட்டிலும், பின்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால், இரு மாடல்களுக்கும் வேற்றுமைகளை எளிதாக பார்க்க முடிகிறது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்!

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி ஒமேகா ஆர்க் என்ற புதிய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. டிசைனில் புதுமையாகவும், கம்பீரமாகவும் இருக்கிறது. மூன்றாவது இருக்கை பொருத்தும் வகையில், ஹாரியர் எஸ்யூவியைவிட இந்த எஸ்யூவி நீளத்தில் 63 மிமீ வரையிலும், அகலத்தி் 72 மிமீ வரையிலும், உயரத்தில் 80 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலானது 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்!

ஃபியட் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் இந்த எஸ்யூவியிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்!

உட்புறத்திலும் மிகவும் பிரிமீயமாக இருக்கும். தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். பனோரமிக் சன்ரூஃப், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுகம் குறித்த புதிய தகவல்!

டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.13.69 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 30, 2020, 10:28 [IST]
English summary
A new media report claims that Tata Motors is planning to delay the launch of the Gravitas SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+