விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்... விபரம் உள்ளே!

டாடா அல்ட்ராஸ் காரின் சக்திவாய்ந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் மாடலின் உற்பத்தி விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது தெரிய வந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்கள் மிக வலுவான சந்தையை தக்க வைத்து வருகின்றன. ஹோண்டா ஜாஸ் கார் குறிப்பிட்ட அளவு மட்டுமே இந்த சந்தையில் பங்களிப்பை பெற்றிருக்கிறது. மேலும், மாருதி பலேனோ காரின் ரீபேட்ஜ் மாடலாக வந்த டொயோட்டா க்ளான்ஸா காரும் ஹோண்டா ஜாஸ் காரின் மார்க்கெட்டை குறைத்துவிட்டது.

விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்

இந்த நிலையில், பிரிமீயம் ஹேட்ச்பேக் மார்க்கெட்டில் அதிக சிறப்பம்சங்களுடன் புத்தம் புதிய அல்ட்ராஸ் கார் மாடலை டாடா மோட்டார்ஸ் இந்த ஆண்டு துவக்கத்தில் கொண்டு வந்தது. வந்தது முதல் சீரான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்

இந்த நிலையில், போட்டியாளர்கள் மிக வலுவான நிலையில் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வையும், மதிப்பையும் அல்ட்ராஸ் காரில் வழங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்

அதன்படி, சக்திவாய்ந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வை அல்ட்ராஸ் காரில் வழங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. தற்போது அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்

தற்போது வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த இரண்டு எஞ்சின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அளிக்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்

இந்த நிலையில், புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலின் உற்பத்தி விரைவில் துவங்கப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தளத்தின் மூலமாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன்மூலமாக, ஊரடங்கு முடிந்தவுடன் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது உறுதியாகி இருக்கிறது.

விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்

இந்த டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 99 பிஎச்பி பவரையும், 141 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்

மாருதி பலேனோ காரில் வழங்கப்பட்டு வந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வு பிஎஸ்6 விதிகளால் நீக்கப்பட்டுவிட்டது. அதேோன்று, ஆர்எஸ் என்ற சக்திவாய்ந்த 1.0 லிட்டர் டர்போ எஞ்சின் தேர்வும் நீக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகமாகிறது பவர்ஃபுல் டாடா அல்ட்ராஸ் கார்

இந்த மார்க்கெட்டை குறிவைத்து டாடா அல்ட்ராஸ் காரின் டீசல் மாடலும், விரைவில் வரும் டர்போ பெட்ரோல் மாடலும் நிலைநிறுத்தப்படும். இனி பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் டீசல் எஞ்சின் தேர்வையும், சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வை எதிர்பார்ப்பவர்கள் மாருதி பலேனோ காரை தவிர்த்து டாடா அல்ட்ராஸ் உள்ளிட்ட பிற மாடல்கள் மீது அதிக கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. எனவே, டாடா மோட்டார்ஸ் நம்பிக்கையுடன் டர்போ பெட்ரோல் மாடலை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
According to the report, Tata Motors is planning to launch the Altroz 1.2 Liter turbo petrol model in India very soon.
Story first published: Monday, May 4, 2020, 16:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X