தீபாவளி பண்டிகை டாடா மோட்டார்ஸுக்கு தான் போல!! விற்பனை 72 சதவீதம் அதிகரிப்பு

கடந்த 2020 அக்டோபர் மாதத்தில் ஆச்சிரியப்படுத்தும் வகையிலான விற்பனை எண்ணிக்கைகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பதிவு செய்துள்ளது. இதனை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

தீபாவளி பண்டிகை டாடா மோட்டார்ஸுக்கு தான் போல!! விற்பனை 72 சதவீதம் அதிகரிப்பு

இந்திய சந்தையில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23,617 யூனிட் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை 2019 அக்டோபர் மாதத்தை காட்டிலும் சுமார் 72 சதவீதம் அதிகமாகும்.

தீபாவளி பண்டிகை டாடா மோட்டார்ஸுக்கு தான் போல!! விற்பனை 72 சதவீதம் அதிகரிப்பு

ஏனெனில் அந்த மாதத்தில் 13,169 யூனிட் கார்களையே இந்தியாவில் டாடா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்திருந்தது. 2020 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2020 அக்டோபரின் 23,617 என்ற எண்ணிக்கை 11 சதவீதம் அதிகமாகும்.

தீபாவளி பண்டிகை டாடா மோட்டார்ஸுக்கு தான் போல!! விற்பனை 72 சதவீதம் அதிகரிப்பு

கார்களின் விற்பனையில் டாடா மோட்டார்ஸின் இத்தகைய முன்னேற்றத்திற்கு கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமான அல்ட்ராஸ் ப்ரீமியம் ஹேட்ச்பேக், டியாகோவின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் வகையில் அந்த காரில் கொண்டுவரப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் மற்றும் புதிய வசதிகளை பெற்ற நெக்ஸானின் பங்கு இன்றியமையாதது.

தீபாவளி பண்டிகை டாடா மோட்டார்ஸுக்கு தான் போல!! விற்பனை 72 சதவீதம் அதிகரிப்பு

முந்தைய செப்டம்பர் மாதத்தை காட்டிலும் கடந்த அக்டோபரில் அதிக டாடா கார்கள் விற்பனையாகி இருப்பதன் மூலம் பண்டிகை காலத்தில் புதிய கார்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பது மீண்டும் ஒரு உறுதியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை டாடா மோட்டார்ஸுக்கு தான் போல!! விற்பனை 72 சதவீதம் அதிகரிப்பு

டாடா மோட்டார்ஸின் டியாகோ, டிகோர், அல்ட்ராஸ், நெக்ஸான் மற்றும் ஹெரியர் கார்களுக்கு அட்டகாசமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவும் டாடாவின் விற்பனை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். பயணிகள் வாகனம் மட்டுமின்றி கமர்ஷியல் வாகனங்களின் விற்பனையிலும் கடந்த மாதத்தில் டாடா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை டாடா மோட்டார்ஸுக்கு தான் போல!! விற்பனை 72 சதவீதம் அதிகரிப்பு

பயணிகள் வாகனங்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்கள் என இரண்டையும் சேர்த்து மொத்தம் 49,669 யூனிட் வாகனங்களை இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் கடந்த மாதத்தில் விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனை எண்ணிக்கை 2019 அக்டோபருடன் ஒப்பிடும்போது 27 சதவீதம் அதிகம்.

தீபாவளி பண்டிகை டாடா மோட்டார்ஸுக்கு தான் போல!! விற்பனை 72 சதவீதம் அதிகரிப்பு

மற்ற நாட்டு சந்தைகளில் விற்பனையான டாடா வாகனங்களையும் சேர்த்து பார்த்தால், 52,132 யூனிட் வாகனங்களை 2020 அக்டோபரில் இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 2019 அக்டோபர் மாதத்தை காட்டிலும் 26 சதவீதம் அதிகமாகும். கடந்த மாதத்தில் 2,420 யூனிட் கமர்ஷியல் வாகனங்களை டாடா இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இதுவும் 20 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Motors sales october 52132 units details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X