பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா மோட்டார்ஸ்!

கார் உள்ளிட்ட பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ். இதுதொடர்பான முக்கிய விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா!

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி குழுமம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் பெற்றிருக்கிறது. கார் உள்ளிட்ட சிறிய வகை வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை டாடா மோட்டா்ஸ் உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவிலும் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா!

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வர்த்தக வாகன உற்பத்தியில் சிறந்து விளங்கினாலும், கார் உள்ளிட்ட பயணிகள் வாகன விற்பனை சந்தையில் மிக பின்தங்கி இருந்தது.

பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா!

எனினும், கடந்த சில ஆண்டுகளாக புத்தம் புதிய கார் மாடல்களை களமிறக்கி, பயணிகள் வாகனச் சந்தையிலும் முன்னிலை பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா!

இதற்கு ஓரளவு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. எனினும், எதிர்பார்த்த அளவு பலன் இல்லை என்பதை மனதில் வைத்து, பயணிகள் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனமாக மாற்றுவதற்கு டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா!

இதன்மூலமாக, பயணிகள் வாகன விற்பனை பிரிவில் அதிக கவனம் செலுத்துவதற்கும், வருவாய் குறித்த தெளிவான வர்த்தக திட்டங்களை செயல்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் கருதுகிறது.

பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா!

பயணிகள் வாகன விற்பனை மற்றும் மின்சார வாகனங்கள் விற்பனையை தனி நிறுவனமாக மாற்றும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் குழுமத்தில் பரஸ்பரம் பிற பிரிவுகளுடன் தொடர்புகள் தக்க வைக்கப்படும்.

MOST READ: 1200கிமீ தூரம்! சொந்த ஊர் செல்ல விநோதமான வாகனத்தில் புறப்பட்ட தொழிலாளிகள்! போலீசுக்கே இது செம்ம ஷாக்

பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா!

இதன்மூலமாக, அதிக முதலீடுகள் தவிர்க்கப்படும். வேறு புதிய பயணிகள் வாகன நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கும் இது சிறப்பாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

MOST READ: வேகமாக பரவும் கொரோனா வைரஸ்... எல்லாரும் ஆசைப்பட்ட அறிவிப்பு வெளியானது... மத்திய அரசு அதிரடி...

பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா!

இதனிடையே, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவின் தலைவராக இருந்த மாயங்க் பரீக் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளார். அவருக்கு பதிலாக சைலெஷ் சந்திரா டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட உள்ளார். வரும் 1ந் தேதி முதல் அவர் பணி ஏற்க உள்ளார்.

MOST READ: பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு நீடிப்பு... ஆனா, பல கண்டிஷன்!

பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்றுகிறது டாடா!

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மாயங்க் பரீக் ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புதிய மாற்றங்கள் மூலமாக, பயணிகள் வாகன விற்பனைப் பிரிவில் படு தீவிரமாக டாடா மோட்டார்ஸ் களமிறங்கி உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், பல புதிய மாடல்களையும் அந்நிறுவனம் வரிசை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata Motors is planning to split the passenger vehicles business as a new subsidiary and announced management changes in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X