டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் தரவுத்தளத்தின்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டாடா டைம்ரோ என்ற புதிய பெயரை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

டாடா நிறுவனம் தற்போது சொந்தமாக்கியுள்ள இந்த புதிய பெயர்பலகை எச்பிஎக்ஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு இந்நிறுவனத்தில் இருந்து விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மைக்ரோ எஸ்யூவி காருக்கு சூட்டப்பட வாய்ப்புள்ளதாக கார்அண்ட்பைக் செய்திதளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

இதுகுறித்து வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் வெளியிட்டுள்ள விரிவான தகவல்களில் இந்த வர்த்தக முத்திரையை டாடா நிறுவனம் கடந்த ஆண்டிலேயே தாக்கல் செய்துவிட்டதாகவும், அதற்கு தற்போது (2020 செப்டம்பர்) அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக அறிமுகப்படுத்த இரு எஸ்யூவிகளை தயார்படுத்தி வருகிறது. அதில் ஒன்று ஹெரியரின் 7-இருக்கை வெர்சனான கிராவிட்டாஸ். மற்றொரு 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்ப்பட்ட எச்பிஎக்ஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாகிவரும் மைக்ரோ எஸ்யூவி.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

இதில் இருந்து புதிய டைம்ரோ பெயர்பலகை இந்த மைக்ரோ எஸ்யூவிக்கு வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பது தெளிவாக தெரியவருகிறது. டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு கீழே நிலைநிறுத்தப்படவுள்ள இந்த மைக்ரோ எஸ்யூவியை முன்னதாக இந்த வருட இறுதியில் அறிமுகப்படுத்த டாடா திட்டமிட்டிருந்தது.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

ஆனால் அதற்குள்ளாக கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கவே இதன் அறிமுகம் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போகியுள்ளது. நிறுவனத்தின் ஆல்ஃபா கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ள டாடாவின் இந்த மைக்ரோ எஸ்யூவி கிட்டத்தட்ட 90 சதவீத தயாரிப்பு பணிகளை முடித்து கொண்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

மேலும் இந்த ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தில் தான் அல்ட்ராஸ் போன்ற ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக கடந்த சில மாதங்களாக தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டுவடும் எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி அவ்வாறான சோதனைகளின்போது முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில்தான் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

இதனால் டாடா நிறுவனம் இதன் தோற்றத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது என்பதை கண்டறிவது தற்போதுவரை கடினமாக ஒன்றாகவே உள்ளது. இருப்பினும் சில ஸ்பை படங்கள் இந்த புதிய டாடா தயாரிப்பு உயரமான தோற்றத்துடன் பிளவுப்பட்ட ஹெட்லேம்ப்களை முதன்மை விளக்குகளுடன் பெற்றுள்ளதை வெளிக்காட்டி இருந்தன.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

மேலும் இந்த ஹெட்லேம்ப் அமைப்பிற்கு மேற்புறத்தில் முன்பக்க க்ரில்லிற்கு நெருக்கமாக பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி விளக்குகளையும் எதிர்பார்க்கலாம். அதேபோல் பின்புறத்தில் திரி-அம்பு வடிவில் எல்இடி விளக்குகளுடன் காம்பெக்ட் டெயில்லேம்ப்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

இருப்பினும் டெயில்லேம்பின் இந்த காம்பெக்ட் டிசைன் இன்னும் உறுதியாகவில்லை. இவற்றுடன் எச்பிஎக்ஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுவரும் இந்த எஸ்யூவியின் தயாரிப்பில் நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் 2.0 டிசைன் தத்துவத்தையும் டாடா நிறுவனம் உபயோகப்படுத்தியுள்ளது.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

இவை தவிர்த்த இயந்திய பாகங்கள் மற்றுன் என்ஜின் பாகங்கள் குறித்த அதிகாரப்பூர்வ விபரங்கள் காரின் அறிமுகத்தின்போதுதான் வெளியாகவுள்ளன. இருப்பினும், இந்த மைக்ரோ எஸ்யூவி காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜினை டாடா நிறுவனம் பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரில் வழங்கப்பட்டு வருகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை டாடா நிறுவனம் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக பெற்று வருகிறது.

டைம்ரோ என்ற பெயரை பதிவுசெய்து கொண்டது டாடா... புதிய மைக்ரோ எஸ்யூவி காருக்காகவா..?

ஆனால் இந்த புதிய எஸ்யூவி மாடலில் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷனும் எதிர்பார்க்கப்படுகிறது. டாடாவின் இந்த எச்பிஎக்ஸ் அடிப்படையிலான எஸ்யூவிக்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட மைக்ரோ எஸ்யூவிகள் போட்டியாக விளங்கவுள்ளன.

Most Read Articles

English summary
Tata Motors Files A Trademark For The Name 'Timero' In India
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X