புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

பிஎஸ்-6 தரத்தில் விற்பனைக்கு கிடைக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் மைலேஜ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென இந்தியாவில் எப்போதுமே தனித்துவமான வரவேற்பு உண்டு. அதிலும், அதன் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றான நெக்ஸான் எஸ்யூவி காருக்கு சிறப்பு வரவேற்பு நிலவி வருகின்றது. ஏனென்றால், இதுதான் இந்தியாவின் முதல் பாதுகாப்பான கார் ஆகும். இந்த பட்டத்தை டாடா நெக்ஸான் சூடியது முதல் அபரீதமான வரவேற்பை அது பெற்று வருகின்றது.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

குளோபல் என்சிஏபி அமைப்பு மேற்கொண்ட கிராஷ் டெஸ்டில்தான் டாடா நெக்ஸான் இந்த பட்டத்தை வென்றது. குறிப்பாக, ஐந்திற்கு ஐந்து என்ற நட்சத்திரங்களைப் பாதுகாப்பு தரத்தில் இது பெற்றது. இந்த காரைதான் டாடா நிறுவனம் அண்மையில் பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தி அறிமுகம் செய்தது.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

இந்த பிஎஸ்6 மாடல் எவ்வளவு மைலேஜ் வழங்கும் என்ற கேள்வி பலரின் மத்தியில் எழும்பியுள்ளது. இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இதற்கு முன்பாக அந்த கார்குறித்த சில சுவாரஷ்ய தகவலை பார்த்துவிடலாம்.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் புதிய மாசு உமிழ்வு விதி பிஎஸ்-6 நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் அதன் பிரபல மாடல்களை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தும் முயற்சியில் களமிறங்கின.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

அந்தவகையில், டாடா நிறுவனமும் அதன் பிரபல மாடல்களான டிகோர், டியாகோ உள்ளிட்ட மாடல்களை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தியது. இதில், டாடா நெக்ஸான் எஸ்யூவியும் அடங்கும்.

பிஎஸ்-6 எஞ்ஜின் அப்டேட்டைப் பெற்ற இந்த கார் பிஎஸ்-4 மாடலுடன் ஒப்பிட்டு பார்க்கையில் பல்வேறு மாற்றங்களைப் பெற்றதாக இருக்கின்றது. அதாவது, உடல் அமைப்பு, மின் விளக்கு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவற்றில் கணிசமான மாற்றத்தைப் பெற்றிருந்தது.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

இத்துடன், எஞ்ஜின் திறன், மாசு வெளியிடும் அளவு மற்றும் மைலேஜ் உள்ளிட்டவற்றிலும் வித்தியாசத்தைப் பெறும் வகையில் அது மாறுதலைப் பெற்றிருக்கின்றது.

அதாவது, பிஎஸ்-4 மாடலைக் காட்டிலும் பிஎஸ்-6 நெக்ஸான் குறைந்த மாசையே வெளிப்படுத்தும் வகையில் அப்டேட்டைப் பெற்றிருக்கின்றது.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

தற்போது டாடா நெக்ஸான் ஏஎம்டி கியர்பாக்ஸுடன் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இருவிதமான தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில், பெட்ரோல் வெர்ஷன் நெக்ஸானில் 1.2 லிட்டர் டர்போசார்ஜட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 120 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கின்றது.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

இதேபோன்று, டீசல் எஞ்ஜின் வெர்ஷன் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜினில் கிடைக்கின்றது. இது அதிகபட்சமாக 110 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது. சரி, வாருங்கள் நெக்ஸானின் எந்தெந்த வேரியண்ட் எவ்வளவு மைலேஜை வழங்குகிறது என்பது பற்றிய தகவலை பார்க்கலாம்.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

சமீபத்தில் அராய் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, பெட்ரோல் ஏஎம்டி வெர்ஷனில் கிடைக்கும் டாடா நெக்ஸான் லிட்டர் ஒன்றிற்கு 16 கிமீ மைலேஜை வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதேபோன்று, டீசல் ஏஎம்டி எஞ்ஜினுடைய நெக்ஸான் அதிகபட்சமாக லிட்டர் ஒன்றிற்கு 22.4 கிமீ மைலேஜை வழங்குகின்றது.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

இவையிரண்டும் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் நெக்ஸானைக் காட்டிலும் 1 கிமீ மட்டுமே குறைவான மைலைஜ் திறனை வெளிப்படுத்துகின்றது. எனவே, மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கும் நெக்ஸான் ஆட்டோமேட்டிக் கார்களைக் காட்டிலும் 1 கிமீ மைலேஜை அதிகமாக வழங்குகின்றது.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

அதேசமயம், நெக்ஸானுக்கு போட்டியாக களத்தில் (இந்தியாவில்) இருக்கும் மாருதி ரெஸ்ஸா என்ன மைலேஜ் கொடுக்கின்றது என தெரியுமா..? எஸ்யூவி ரகத்திலான இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 18.76 கிமீ மைலேஜை வழங்குகின்றது. இது டாடா நெக்ஸானைக் காட்டிலும் 2 கிமீ அதிக மைலேஜ் ஆகும். இதேபோன்று, ஃபோர்டு ஈகோஸ்போர்டு பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 14.71 கிமீ மைலேஜை ஒரு லிட்டருக்கு வழங்குகின்றது. இது நெக்ஸானைக் காட்டிலும் குறைந்தளவு மைலேஜ் திறன் ஆகும்.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

டாடா நிறுவனத்தின் இந்த நெக்ஸான் கார் இந்தியாவில் மாருதி பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஆகிய கார்களுக்கு மட்டுமின்றி ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி500 உள்ளிட்ட கார்களுக்கும் போட்டியாக இருந்து வருகின்றது.

அதேசமயம், நெக்ஸான் எஸ்யூவி கார் எரிபொருள் தேர்வில் மட்டுமில்லாமல் மின்சார வேரியண்டிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் ஒரு முழுமையான சார்ஜில் 312 கிமீ ரேஞ்ஜை வழங்குகின்றது.

புதிய பிஎஸ்-6 டாடா நெக்ஸான் மைலேஜ் எப்படி..? அராய் வெளியிட்ட ஆச்சரிய தகவல்... சும்ம அல்லுதே!

இந்த அதீத திறனை வெளிப்படுத்தும் வகையில் டாடா நெக்ஸான் காரில் 95கிலோவாட் திறன் கொண்ட மின் மோட்டார் மற்றும் 30.2kWh லித்தியம்-அயான் பேட்டரி தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. எனவே, டாடா நெக்ஸான் எஸ்யூவி எரிபொருள் தேர்வில் மட்டுமல்ல மின்சார தேர்விலும் நம்மை அசர வைக்கின்ற வகையிலேயே உள்ளது.

Most Read Articles
English summary
Tata Nexon AMT BS6 Fuel-Economy Revealed By ARAI. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X