அதிக பவருடன் முஷ்டியை உயர்த்திய டாடா நெக்ஸான் பெட்ரோல் மாடல்!
அதிக சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா நெக்ஸான் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தனது மதிப்பை கூட்டிக் கொண்டுள்ளது. இந்தநிலையில், அண்மையில் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பிஎஸ்-6 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில், பெட்ரோல் மாடலின் எஞ்சின் அதிக பவரை வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த எஸ்யூவியின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் இருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த பெட்ரோல் எஞ்சின் 120 பிஎஸ் பவரை வழங்கும் விதத்தில் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. டார்க் திறனில் வித்தியாசம் இல்லை. போட்டியாளர்களைவிட சிறந்த மதிப்பு வாய்ந்த மாடலாக உயர்த்தும் நோக்கில் பெட்ரோல் எஞ்சினை மேம்படுத்தி உள்ளது டாடா மோட்டார்ஸ்.

அதேநேரத்தில், நெக்ஸான் எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. அதே 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் தொடர்கிறு. நெக்ஸான் பெட்ரோல் மாடலின் பவர் அதிகரிக்கப்பட்டு இருப்பது குறித்து டாடா மோட்டார்ஸ் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

டாடா நெக்ஸான் காரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

டாடா மோட்டார்ஸ் இணையதளத்தில் இந்த விபரம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் வெனியூ காரில் வழங்கப்படும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 120 பிஎஸ் பவரை வழங்கும் திறனை பெற்றிருக்கிறது.

அதேபோன்று, மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 110 பிஎஸ் பவரையும் 200 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறன்கொண்டதாக இருக்கிறது. இந்த நிலையில், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியில் விரைவில் 130 பிஎஸ் பவரையும், 230 என்எம் டார்க் திறனையும் வழங்கும் புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

போட்டியாளர்களுக்கு இணையாக நெக்ஸான் எஸ்யூவியின் மதிப்பை கூட்டும் விதத்தில், டாடா மோட்டார்ஸ் பெட்ரோல் எஞ்சினை மாற்றங்களை செய்துள்ளதாக தெரிகிறது.

அண்மையில் வந்த புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய க்ரில் அமைப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, புதிய வசதிகளுடன் இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வாகனத்தின் இருப்பிடம் கண்டறியும் வசதி, எலெக்ட்ரிக் சன்ரூஃப், புதிய ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி உள்ளிட்ட வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி ரூ.6.95 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கு போட்டியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications








