திணறிய 1 கோடி ரூபா கார்... அசால்ட் செய்த டாடா நெக்ஸான்... இந்த கார்ல இவ்ளோ திறன் இருக்கா? வீடியோ!

டாடா நெக்ஸான் காரின் அதீத திறன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

திணறிய 1 கோடி ரூபா கார்... அசால்ட் செய்த டாடா நெக்ஸான்... இந்த கார்ல இவ்ளே திறன் இருக்கா? வீடியோ!

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மற்றும் அதிக பாதுகாப்பு நிறைந்த காராக நெக்ஸான் எஸ்யூவி கார் இருக்கின்றது. இது அதிக பாதுகாப்பான கார் மட்டுமல்ல அதீத திறன் மிக்க தயாரிப்பும்கூட என்பதை தற்போது நிரூபித்துள்ளது. ஆம், விலையுயர்ந்த மற்றும் அதிக திறன்மிக்க கார்களில் ஒன்றாக இருக்கும் வால்வோ எக்ஸ்சி90 காரால் செய்ய முடியாத ஓர் செயலைச் செய்து டாடா நிறுவனத்திற்கு நெக்ஸான் பெருமைச் சேர்த்துள்ளது.

திணறிய 1 கோடி ரூபா கார்... அசால்ட் செய்த டாடா நெக்ஸான்... இந்த கார்ல இவ்ளே திறன் இருக்கா? வீடியோ!

தற்போது இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பருவ மழைப் பொழிய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பருவ மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றது.

திணறிய 1 கோடி ரூபா கார்... அசால்ட் செய்த டாடா நெக்ஸான்... இந்த கார்ல இவ்ளே திறன் இருக்கா? வீடியோ!

இந்த மழை வெள்ளத்திலேயே வால்வோ எக்ஸ்சி90 கார் கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கும் காட்சி வெளியாகியிருக்கின்றது. அதே பாதையை கடக்கும் டாடா நெக்ஸான் கார் எந்தவொரு தங்கு தடையுமின்றி சீராக செல்வதை காருக்குள் இருந்த கேமிராவில் பதிவாகிய காட்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன.

திணறிய 1 கோடி ரூபா கார்... அசால்ட் செய்த டாடா நெக்ஸான்... இந்த கார்ல இவ்ளே திறன் இருக்கா? வீடியோ!

ஆம், மழை வெள்ளத்தில் நீர் அலைகளை உருவாக்கியவாறு செல்லும் காரே டாடா நெக்ஸான் ஆகும். அது ஓர் பாதையைக் கடக்கும்போது எதேர்ச்சையாக அக்காரில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் சிக்கிய காட்சியே வால்வோ எக்ஸ்சி90 சிக்கி தவித்த சம்பவம்.

திணறிய 1 கோடி ரூபா கார்... அசால்ட் செய்த டாடா நெக்ஸான்... இந்த கார்ல இவ்ளே திறன் இருக்கா? வீடியோ!

பொதுவாகவே, அதிகளவில் நீர் தேங்கியிருக்கும் பாதையில் வாகனங்களை இயக்குவது அதன் இயக்கத்திற்கு நல்லது அல்ல. வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் சாலையில் காரை ஓட்டினால் காரின் குறிப்பிட்ட பாகங்களை நீர் பதம் பார்க்கக்கூடும். இதனால் கடுமையாக பாதிப்புகள் ஏற்ப வாய்ப்பு உண்டு. இதனால் பெரும் செலவீணமே ஏற்படும். மேலும், நீர் நிறைந்திருக்கும் பாதையில் பள்ளம், மேடு எங்கிருக்கின்றது என்பது தெரியாது.

திணறிய 1 கோடி ரூபா கார்... அசால்ட் செய்த டாடா நெக்ஸான்... இந்த கார்ல இவ்ளே திறன் இருக்கா? வீடியோ!

இது மிகப்பெரிய பின் விளைவைக்கூட நொடிப்பொழுதில் ஏற்படுத்திவிடும். எனவேதான் வெள்ள நீர் சூழ்ந்த பகுதியில் வாகனங்களை இயக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றது. இதைமீறி இயக்கும் வாகன ஓட்டிகளே சில நேரங்களில் வால்வோ எக்ஸ்சி90 போன்று சிக்கிக்கொள்கின்றன.

தற்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோவில், டொயோட்டா ஃபார்ச்சூனர், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட கார்கள்கூட அந்த சாலையில் பயணிக்க தயங்கி நிற்பதை நம்மால் காண முடிகின்றது. அதிகளவு நீர் நிறைந்த சாலை ஆபத்தானது. அது விலையுயர்ந்த கார்களுக்கு அதிகப்படியான செலவை ஏற்படுத்திவிடும். இதன் காரணத்தினாலயே அவர்கள் அங்கு வேக வேகமாக செல்லாமல் தயங்கி நிற்கின்றனர்.

திணறிய 1 கோடி ரூபா கார்... அசால்ட் செய்த டாடா நெக்ஸான்... இந்த கார்ல இவ்ளே திறன் இருக்கா? வீடியோ!

இதுபோன்ற சாலையில் பயணிப்பது அதன் இசியு சிஸ்டத்தைப் பாதிக்கக்கூடும். அம்மாதிரியான ஓர் பிரச்னையாலயே வால்வோ எக்ஸ்சி90 கார் நடு சாலையில் சிக்கி நின்றிருக்கின்றது. டாடா நெக்ஸான் அதிர்ஷ்டவசமாக அம்மாதிரியான பிரச்னையைச் சந்திக்கவில்லை. இந்த சம்பவத்தை வைத்து வால்வோ எக்ஸ்சி9 தரம் குறைவான கார் என்று கூறிவிட முடியாது.

திணறிய 1 கோடி ரூபா கார்... அசால்ட் செய்த டாடா நெக்ஸான்... இந்த கார்ல இவ்ளே திறன் இருக்கா? வீடியோ!

ஏனெனில், அக்காரிலும் அதிக தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தற்போதைய இக்கட்டான சூழ்நிலுக்கு அக்காரின் துரதிர்ஷ்டவசமே காரணமாக உள்ளது. வால்வோ எக்ஸ்சி90 கார் இந்தியாவில் ரூ. 80 லட்சம் முதல் ரூ. 1.31 கோடி வரையிலான விலையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், டாடா நெக்ஸான் இதைக் காட்டிலும் பல மடங்கு குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

திணறிய 1 கோடி ரூபா கார்... அசால்ட் செய்த டாடா நெக்ஸான்... இந்த கார்ல இவ்ளே திறன் இருக்கா? வீடியோ!

டாடா நெக்ஸான் கார் இந்தியாவின் அதிக பாதுகாப்பு நிறைந்த காராக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையில் இந்த தயாரிப்பிற்கு கூடுதல் பெருமை சேர்க்கும் விதமாக அக்கார் வெள்ளம் சூழ்ந்த சாலையில் அசால்டாக சென்று சேர்ந்துள்ளது. தற்போது இந்த இணையவாசிகள் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Nexon Crosses Waterlogged Road. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X