இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் கார்... டாடா நெக்ஸான் இவி மாடலின் டெலிவிரிகள் ஆரம்பம்...

கொரோனா வைரஸிற்கு ஏற்ப மக்கள் வாழ பழகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் இவி மாடலுக்கான டெலிவிரி பணிகளை குறிப்பிட்ட சில நகரங்களில் துவங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் கார்... டாடா நெக்ஸான் இவி மாடலின் டெலிவிரிகள் ஆரம்பம்...

ஊரடங்கில் சிறிய தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது டீலர்ஷிப்களை அரசாங்கத்தால் பச்சை மண்டலங்களாக பிரிக்கப்பட்ட பகுதிகளில் திறந்துள்ளன. இந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது டீலர்ஷிப் ஷோரூம்களை ஒவ்வொன்றாக திறந்து வருகிறது.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் கார்... டாடா நெக்ஸான் இவி மாடலின் டெலிவிரிகள் ஆரம்பம்...

இந்த டீலர்ஷிப்களில் இருந்து சமீபத்தில் கிராவிட்டாஸ் எஸ்யூவி மாடல் சென்னை-பெங்களூர் சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது நெக்ஸான் எலக்ட்ரிக் மாடலின் டெலிவிரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த டெலிலிவிரிகள் இந்நிறுவனத்தின் அனைத்து டீலர்ஷிப்களில் இருந்தும் நடந்தப்படவில்லை.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் கார்... டாடா நெக்ஸான் இவி மாடலின் டெலிவிரிகள் ஆரம்பம்...

மாறாக சென்னை, அகமதாபாத் மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள டீலர்ஷிப்களில் முன்பதிவு செய்தவர்களுக்கே இந்த எலக்ட்ரிக் மாடல் டெலிவிரி செய்யப்பட்டு வருகிறது. இவற்றை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் மற்ற நகரங்களில் இருந்தும் நெக்ஸான் இவி மாடலின் டெலிவிரி பணிகளை துவங்க இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் கார்... டாடா நெக்ஸான் இவி மாடலின் டெலிவிரிகள் ஆரம்பம்...

கடந்த ஜனவரி மாதத்தில் சந்தையில் அறிமுகமான நெக்ஸான் எலக்ட்ரிக் மாடல் கடந்த மார்ச் மாதத்தில் தனது போட்டி மாடல்களான எம்ஜி இஇசட்எஸ் மற்றும் ஹூண்டாய் மாடல்களை முந்தி விற்பனையில் சுமார் 198 யூனிட்களை சந்தையில் பதிவு செய்திருந்தது.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் கார்... டாடா நெக்ஸான் இவி மாடலின் டெலிவிரிகள் ஆரம்பம்...

இந்த எண்ணிக்கை குறைவு தான் என்றாலும், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையில் தற்போது தான் ஆரம்பக்கட்ட நிலையில் உள்ள இந்திய சந்தைக்கு இது அதிகமே ஆகும். மேலும் இந்த எலக்ட்ரிக் க்ராஸ்ஓவர் மாடலின் விற்பனை எண்ணிக்கை வரும் மாதங்களில் கணிசமாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் கார்... டாடா நெக்ஸான் இவி மாடலின் டெலிவிரிகள் ஆரம்பம்...

ஆனால் தற்போது கொரோனாவினால் பலர் பொருளாதாரத்தை இழந்துள்ளதால் முன்பதிவு செய்த கார்களின் முன்பதிவுகளை மாதத்தவணை செலுத்த முடியாமல் ரத்து செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் கார்... டாடா நெக்ஸான் இவி மாடலின் டெலிவிரிகள் ஆரம்பம்...

டாடா நெக்ஸான் இவி மாடலை பொறுத்தவரையில், இந்த க்ராஸ்ஓவர் மாடலில் 312 கிமீ ரேஞ்ச்சை வழங்கக்கூடிய புதிய ஜிப்ட்ரோன் எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பை டாடா நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த அமைப்பில் உள்ள நிரந்தர காந்த ஒத்திசைவு மோட்டார் அதிகப்பட்சமாக 127 பிஎச்பி மற்றும் 245 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

இந்தியாவின் மலிவான எலக்ட்ரிக் கார்... டாடா நெக்ஸான் இவி மாடலின் டெலிவிரிகள் ஆரம்பம்...

இதன் எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றலை வழங்குவதற்கு 30.2 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் மாடலுக்கு எக்ஸ்ஷோரூமில் ரூ.13.99 லட்சம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Tata Nexon Electric deliveries start in Ahmedabad, Chennai, Bangalore
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X