மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய், எம்ஜி மோட்டார்ஸ் வரிசையில் தனி நபர் பயன்பாட்டுக்கு ஏற்ற அம்சங்கள் கொண்ட எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் களமிறக்கி உள்ளது.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

ஏற்கனவே, டிகோர் கார் மாடலை விற்பனையில் வைத்திருந்தாலும், தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற அதிக சிறப்பம்சங்களுடன் புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வந்துள்ளது. இந்த கார் XM, XZ+, XZ+ Lux என மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 95kW மின் மோட்டார் உள்ளது. இந்த மின் மோட்டார் அதிகபட்சமாக 129 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இது சிறப்பான செயல்திறன் கொண்ட மின்சார மாடலாக இறுப்பதால், வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வாய்ப்புள்ளது.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 30.2kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று அராய் சான்றளித்துள்ளது.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் பேட்டரியை சாதாரண சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றும்போது 60 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு பேட்டரியில் சார்ஜ் ஏற்றிவிடலாம்.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

தனது டீலர்கள் மற்றும் பொது இடங்களில் ஃபாஸ்ட் சார்ஜர்கள் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே இறங்கிவிட்டது.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், க்ரில் அமைப்புக்கு பதிலாக பியானோ பிளாக் சட்டத்துடன் கூடிய முகப்பு வசீகரமாக உள்ளது. மேலும், விசேஷ வண்ண அலங்காரமும் முகப்பை அழகாக காட்டுகிறது. சாதாரண மாடலை போன்றே பக்கவாட்டு டிசைன் இருக்கிறது. இந்த காரில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் உள்ளன. மொத்தத்தில் வசீகரமான எலெக்ட்ரிக் எஸ்யூவியாக இருக்கிறது.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

உட்புறத்தில் இன்ஃபோடெயினமென்ட் சிஸ்டம் இன்டர்நெட் வசதியுடன் வர இருக்கிறது. இதன் மூலமாக, கனெக்ட்டெட் கார் என்று சொல்லக்கூடிய 35 விதமான வசதிகளை ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக பெறும் வாய்ப்பு உள்ளது. புஷ் பட்டன் ஸ்டார்ட், கீ லெஸ் என்ட்ரி, டிரைவிங் மோடுகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், வைப்பர்களும் உள்ளன.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இதன் முக்கிய அம்சமாக உள்ளது. காரின் பேட்டரியில் இருக்கும் சார்ஜ் அளவு, ரீஜெனெரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்திடன் பயன்பாடு எந்த அளவு உள்ளது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். சாஃப்ட் டச் பிளாஸ்டிக் கொண்ட டேஷ்போர்டு அமைப்பு கவர்கிறது.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் அசென்ட் அசிஸ்ட், ஹில் டிசென்ட் அசிஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைன்டர், ஹை ஸ்பீடு வார்னிங் அலர்ட், பெடஸ்ட்ரியன் புரொடெக்ஷன் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா நெக்ஸான் கார் நீலம், வெள்ளை மற்றும் சில்வர் என மூன்று விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.13.99 லட்சம் விலையும், நடுத்தர எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட்டிற்கு ரூ.14.99 லட்சமும், டாப் வேரியண்ட்டிற்கு ரூ.15.99 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.21,000 முன்பணத்துடன் இந்த காருக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.

மிக சவாலான விலையில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியின் பேட்டரி மற்றும் மின் மோட்டாருக்கு 8 ஆண்டுகள் அல்லது 1.60 லட்சம் கிலோமீட்டர்களுக்கான வாரண்டி திட்டம் வழங்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களைவிட விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி தேர்வாக அமையும்.

Article Published On: Tuesday, January 28, 2020, 13:48 [IST]
English summary
Tata Motors has launched their first-ever electric car Nexon EV in India with stunning starting at Rs.13.99 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+