விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது!

எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்ற மாடலாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாறி இருக்கும் நிலையில், உற்பத்தி புதிய மைல்கல்லை தொட்டு அசத்தி இருக்கிறது.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது!

எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சந்தையில் களமிறக்கப்பட்ட ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களுக்கு விற்பனை ஸ்திரமாக உயர்ந்து வருகிறது.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது!

மேற்கண்ட மூன்று மாடல்களில் விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி தேர்வாக டாடா நெக்ஸான் எஸ்யூவி உள்ளது. அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. மேலும், எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் 62 சதவீதம் விற்பனை பங்களிப்புடன் முதன்மையான மாடலாகவும் உள்ளது.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது!

இந்த நிலையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் உற்பத்தி புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் ஆலையில் இருந்து 1,000-மாவது டாடா நெக்ஸான் எஸ்யூவி உற்பத்தி பிரிவில் இருந்து வெளிவந்தது. மிக குறுகிய காலத்தில் சிறப்பான விற்பனையையும், உற்பத்தி எண்ணிக்கையும் டாடா நெக்ஸான் பதிவு செய்துள்ளது.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 95kW எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் 30.2kWh லித்தியம் அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து அதிகபட்சமாக 128 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மணிக்கு 122 கிமீ வேகம் வரை செல்லும். 0 - 100 கிமீ வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டிவிடும்.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று அராய் சான்று தெரிவிக்கிறது. நடைமுறையில் 270 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 60 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் கீ லெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடயெின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

விற்பனையில் கலக்கும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி... உற்பத்தியில் புதிய மைல்கல்லை தொட்டது!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரூ.13.99 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவின் மிக சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாகவும் உள்ளது. மாதச் சந்தா திட்டத்தின் மூலமாக வாங்கி பயன்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Motors has announced a new production milestone in the Indian market. The company recently announced the roll-out of the 1000th unit of their Nexon EV SUV in the country. The Tata Nexon EV has been received extremely well in the Indian market, achieving the milestone in just 6 months of its commercial launch.
Story first published: Wednesday, August 19, 2020, 13:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X