இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

கொரோனா வைரஸ் பிரச்னையால் டாடா கார் விற்பனை கடுமையாக சரிந்த நிலையில், மறுபுறத்தில் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மூலமாக அந்த நிறுவனத்திற்கு மகிழ்ச்சியான விஷயம் கிடைத்துள்ளது.

இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

கொரோனா வைரஸ் பிரச்னையால் வாகன நிறுவனங்கள் கடும் இழப்புகளை சந்தித்து வருகின்றன. கடந்த மாதம் பெரும்பாலான நிறுவனங்களின் விற்பனை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை 75 சதவீதம் வரை சரிந்தது.

இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

இதனால், அந்நிறுவனம் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இந்த சூழலில், அந்நிறுவனத்திற்கு நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மகிழ்ச்சியான விஷயத்தை தந்துள்ளது.

இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

ஆம். கடந்த மாதம் ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களை விஞ்சி விற்பனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்றிருக்கிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்.

இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

அதாவது, தற்போது தனிநபர் பயன்பாட்டு மின்சார கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய எலெக்ட்ரிக் கார்கள் தேர்வுக்கு இருக்கின்றன. இதில், ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களும் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான பட்ஜெட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

ஆனால், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரூ. 15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் விலை பட்டியலில் இருப்பதால், எலெக்ட்ரிக் கார் வாங்குவோரின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்தநிலையில், கடந்த மாதம் 14 ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார்களும், 116 எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களும் விற்பனையாகின.

இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

ஆனால், இவற்றை விஞ்சும் வகையில், 198 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகி அசத்தி உள்ளன. பட்ஜெட் அடிப்படையில் சற்று முன்பின் இருந்தாலும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கை வித்தியாசத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து இருக்கிறது.

இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

அதாவது, இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற பட்ஜெட்டில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் இருப்பது மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. இந்த கார் வாடிக்கையாளர்களின் தேர்வுக்கு ஏற்றாற்போல் எக்ஸஎம், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

இந்த காரின் எக்ஸ்எம் வேரியண்ட் ரூ.13.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், எக்ஸ்இசட்எஸ் ப்ளஸ் ரூ.14.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ரூ.15.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. இதனால், பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் தேர்வு செய்யும் வாய்ப்பை இந்த கார் வழங்குகிறது.

இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் ஸிப்ட்ரான் என்ற விசேஷ மின்சார வாகன சாதனத் தொகுப்பை டாடா மோட்டார்ஸ் பயன்படுத்துகிறது. இந்த நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மூலமாக சிறந்த தேர்வாக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்.

இங்க விட்டதை அங்க பிடித்த டாடா... கோனா, எம்ஜி இசட்எஸ் கார்களை ஓவர்டேக் செய்த நெக்ஸான் எலெக்ட்ரிக்!

இந்த காரில் இருக்கும் 30.2kWh லித்தியம் அயான் பேட்டரி 127 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும். அராய் சான்றுபடி, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

செய்தி மூலம்

More from DriveSpark

Article Published On: Friday, April 17, 2020, 11:30 [IST]
English summary
Tata Nexon EV has beaten Hyundai Kona and MG ZS electric cars in terms of sales for the month of March 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+