Just In
- 2 hrs ago
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- 3 hrs ago
350,000வது மான்ஸ்டர் பைக்கை டெலிவிரி செய்தது டுகாட்டி!! இந்தியாவில் விற்பனையில் இருக்கா?
- 5 hrs ago
இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும்போது வாங்காமல் விட முடியுமா? நிஸான் மேக்னைட் காருக்கு 35 ஆயிரம் முன்பதிவுகள்!
- 6 hrs ago
ஹோண்டா மின்சார பைக் எப்படி இருக்கும் தெரியுமா?.. இணையத்தில் கசிந்த புகைப்படம்...
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Movies
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மாத சந்தா கட்டணம் மீண்டும் குறைப்பு!
வாடிக்கையாளர்களை கவரும் வகையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாத சந்தா கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி முதன்மையான தேர்வாக மாறி இருக்கிறது. விற்பனையிலும் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், டாடா நெக்ஸான் எஸ்யூவியின் விற்பனையை அதிகரிக்கும் வையில் புதிய திட்டங்களை டாடா அறிவித்தது.

அதன்படி, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு மாத சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, காருக்கு அதிக முன்பணம் செலுத்தி, அதிக விலை கொடுத்து வாங்க விரும்பாதோர், இந்த திட்டத்தில் வாங்கி குறிப்பிட்ட சில ஆண்டுகள் பயன்படுத்திக் கொண்டு திரும்பி கொடுத்துவிடலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மாத சந்தா திட்டம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு அறிவிக்கப்பட்டது. முதலில் ரூ.41,900 மாத சந்தா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த கட்டணத்தில் காப்பீடு, அவசர கால உதவி, மாத பயன்பாட்டு கட்டணம், பராமரிப்பு செலவு என அனைத்தும் அடங்கிவிடும். இதனால், சில ஆண்டுகளுக்கு பயன்படுத்துவோருக்கு இது சிறப்பானதாக கருதப்பட்டது. 12, 24, 36 ஆகிய மாத காலங்களுக்கு இந்த சந்தா திட்டத்தில் டாடா நெக்ஸான் காரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்த முடியும்.

இருப்பினும், மாத சந்தா சற்றே அதிகமாக இருப்பதாக கருதப்பட்டது. இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாத சந்தா கட்டணம் ரூ.34,900ஆக குறைக்கப்பட்டது. அதாவது, ரூ.7,000 வரை கட்டணம் குறைந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த மாத சந்தா கட்டணம் மீண்டும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.29,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.5,400 கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான இந்த மாத சந்தா திட்டத்தை ஒப்பந்த காலத்திற்கு பிறகு நீடிக்கும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இது முன்பணம், மாத பராமரிப்பு, கூடுதல் கால வாரண்டி கட்டணம், மாதத் தவணை இப்படி எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் காரை வாங்கி பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 30.2kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் இருக்கும் மின் மோட்டார் அதிகபட்சமாக 127 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இரண்டு டிரைவிங் மோடுகளும் உள்ளன. இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 312 கிமீ தூரம் பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 8 முதல் 9 மணிநேரம் பிடிக்கும்.