நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்

பண்டிகை காலத்தில் பல நிறுவனங்களும் ஆஃபர்களை வழங்கி வரும் நிலையில், நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் விலையை சத்தமில்லாமல் உயர்த்தி உள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் மிகச் சிறந்த தேர்வாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாறி இருக்கிறது. தற்போதைய நிலையில், 60 சதவீத பங்களிப்புடன் மிக வலுவான நிலையில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் உள்ளது.

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்ததற்கு டிசைன், தொழில்நுட்ப வசதிகள், ரேஞ்ச் மட்டுமின்றி, அதன் சரியான விலையும் மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்

இந்த நிலையில், நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளின் விலையும் ரூ.26,000 உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது, பேஸ் வேரியண்ட்டின் விலை அதிகரிக்கப்படவில்லை. இரண்டு டாப் வேரியண்ட்டுகளின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்

டாடா நெக்ஸான் எக்ஸ்எம் வேரியண்ட் ரூ.13.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். அதேநேரத்தில், நெக்ஸான் எக்ஸ்இசட் ப்ளஸ் விலை ரூ.15.25 லட்சமாகவும், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் விலை ரூ.16.25 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்

டாடா நெக்ஸான் எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட்டுகளில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதி, ரோட்டரி டயலுடன் கூடிய டிரைவ் மோடு தேர்வு செய்யும் வசதி, சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் வைப்பர், ரிவர்ஸ் கேமரா ஆகிய வசதிகள் உள்ளன.

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்

டாடா நெக்ஸான் காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று அராய் சான்று அளித்துள்ளது. நடைமுறையில் 250 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். தினசரி பயன்பாட்டுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி விலையை உயர்த்தியது டாடா மோட்டார்ஸ்

இந்த காரின் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தும்போது ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் சார்ஜ் செய்துவிடும் வாய்ப்பை பெறலாம். ஏசி சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 8 முதல் 9 மணிநேரம் பிடிக்கும்.

Most Read Articles
English summary
Tata Motors has increased the prices of the Nexon EV by upto Rs. 26,000 for the top variants.
Story first published: Wednesday, October 14, 2020, 19:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X