டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் இசட்கனெக்ட் என்ற கனெக்ட்டிவிட்டி செயலி மூலமாக பல்வேறு வசதிகளை வழங்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் கார்களில் இருப்பது போன்று நேரடி இன்டர்நெட் வசதி மூலமாக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை அளிக்கும் கனெக்ட்டிவிட்டி தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

இதே பாணியில் பல்வேறு நிறுவனங்களும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் சி கார்டு பொருத்தி, நேரடி இணைய வசதி மூலமாக பல்வேறு வசதிகளை அளிக்கும் தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்த வரிசையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இப்போது நேரடி இன்டர்நெட் வசதி மூலமாக பல்வேறு வசதிகளை அளிக்க இருக்கிறது.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

டாடா ZConnect என்ற பெயரில் இந்த புதிய செயலி குறிப்பிடப்படுகிறது. இந்த செயலியை ஸ்மார்ட்ஃபோன் மற்றும் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்துடன் ரிமோட் முறையில் இணைத்துக் கொள்ள முடியும்.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

காரின் பேட்டரியில் இருக்கும் சார்ஜர், எவ்வளவு தூரம் பயணிக்கலாம், இதுவரை எத்தனை முறை சார்ஜ் ஏற்றப்பட்டுள்ளது என்ற விபரம், அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையங்கள் விபரங்களை ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக பெற முடியும்.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

மறுபுறத்தில் காரின் மின் மோட்டாரை ஸ்டார்ட் செய்வது, காரில் ஏறுவதற்கு சில நிமிடங்களு்கு முன்னரே ரிமோட் முறையில் ஏசி சிஸ்டத்தை இயக்கி, காரின் கேபினில் குளிர்ச்சியான பின்னர் ஏறும் வசதிகளை பெற முடியும்.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

கார் எங்கு இருக்கிறது என்ற தகவல், கார் சென்று கொண்டிருக்கும் வழித்தடம், காரின் விளக்குகளை ஸ்மார்ட்ஃபோன் மூலமாக இயக்கும் வசதி, காரை ரிமோட் முறையில் திறந்து மூடுவதற்கான வசதிகளையும் இந்த செயலி மூலமாகவே பெற முடியும்.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

அருகிலுள்ள சார்ஜ் ஏற்றும் நிலையம், டாடா மோட்டார்ஸ் சர்வீஸ் மையம் உள்ளிட்டத் தகவல்களையும் இந்த செயலி மூலமாக உடனடியாகவும் துல்லியமாகவும் பெற முடியும்.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

ஒருவேளை கார் விபத்தில் சிக்கினால் இந்த செயலி தானியங்கி முறையில் அருகிலுள்ள அவசர மையங்கள் மற்றும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உறவினர் அல்லது நண்பர்களின் போன் நம்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி எச்சரிக்கை செய்துவிடும்.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

கார் திருடுபோனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 24 மணிநேர கால் சென்டரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், காரின் இயக்கத்தை தடுத்து நிறுத்தும் வசதியும் உள்ளது. காரின் இயக்கம் மற்றும் இதர விஷயங்கள் குறித்து உரிமையாளரின் மொபைல்போனுக்கு உடனுக்குடன் குறுந்தகவல் மூலமாக எச்சரிக்கை செய்யும் வசதியும் இடம்பெற்றிருக்கிறது.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

காரின் வேகத்தை குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்லாமல் கட்டுப்படுத்த முடியும். குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் கார் செல்ல முடியாதவாறு கட்டுப்படுத்தும் ஜியோ ஃபென்சிங் வசதிகளும் உள்ளன.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

கார் ஓட்டுபவரின் முறையையும் தொடர் கண்காணிக்கும் வசதியும் உள்லது. முரட்டுத்தனமாக ஆக்சிலரேட்டர் கொடுப்பது மற்றும் பிரேக் பிடிப்பது உடனுக்குடன் எச்சரிக்கும் வசதியும் உள்ளது.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் இந்த இசட்கனெக்ட் செயலி மிகவும் உன்னதமான விஷயமாகவும், உரிமையாளர்களுக்கு பல்வேறு விதத்திலும் கைகொடுக்கும் விதத்திலும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 30.2kW லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 127 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

டாடா நெக்ஸான் காரில் இன்டர்நெட் வசதியுடன் பிரத்யேக செயலி அறிமுகமாகிறது

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஸ்போர்ட் மோடு ஆப்ஷனிலும் வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2020, 11:27 [IST]
English summary
Tata Motors has revealed that the Nexon electric SUV will get ZConnect app with 35 connected car features in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+