டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

சிறந்த தேர்வு

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக டாடா நெக்ஸான் இருந்து வருகிறது. பாதுகாப்பு தரத்திலும் சிறந்த மாடல் என்ற பெயரை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

சந்தைப் போட்டி

இருப்பினும், இந்த ரகத்தில் அதிக மாடல்கள் இருப்பதால், கடும் சந்தைப் போட்டி இருந்து வருகிறது. இதனை மனதில் வைத்து அவ்வப்போது பல புதிய அம்சங்களுடன் நெக்ஸான் எஸ்யூவியை அறிமுகம் செய்வதுடன், அதிக கவனம் செலுத்தி வருகிறது டாடா மோட்டார்ஸ்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

எஞ்சின் தேர்வுகள்

தற்போது டாடா நெக்ஸான் எஸ்யூவி 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல் எஞ்சின் 120 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாகவும், டீசல் எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாகவும் விற்பனையில் உள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

வேரியண்ட் விபரம்

பெட்ரோல், டீசல் மாடல்களானது மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது. பெட்ரோல், டீசல் மாடல்களானது டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலானது XE, XM, XZ+,XZ+(O), XZ+ Dual Tone ஆகிய வேரியண்ட்டுகளிலும், ஏஎம்டி மாடலானது XMA, XZA+, XZA+ Dual Tone, XZA+ (O) Dual Tone ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைத்து வருகிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

புதிய வேரியண்ட்

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில், XZ+ (S) என்ற புதிய டாப் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வேரியண்ட்டானது XZ+ மற்றும் மிகவும் விலை உயர்ந்த XZ+ (O) ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

சன்ரூஃப்

இந்த வேரியண்ட்டில் தயாரிப்பு கூடத்திலேயே பொருத்தப்பட்ட சன்ரூஃப் இடம்பெற்றிருக்கிறது. இதுதவிர்த்து, XZ+(O) வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், கனெக்டெட் கார் தொழில்நுட்பம் மட்டுமே இடம்பெறவில்லை.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

தேர்வு வாய்ப்பு

இந்த புதிய XZ+ (S) வேரியண்ட்டானு நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பெட்ரோல், டீசல் ஆப்ஷன்களில் கிடைக்கும். அதேபோன்று, மேனுவல் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இந்த வேரியண்ட் கிடைக்கும்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

பெட்ரோல் விலை விபரம்

பெட்ரோல் மாடலின் XZ+ (S) மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.10.10 லட்சம் விலையும், டியூவல் டோன் வேரியண்ட்டிற்கு ரூ.10.30 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. XZ+ (S) ஏஎம்டி மாடலுக்கு ரூ.10.70 லட்சம் விலையும், ஏஎம்டி டியூவல் டோன் வேரியண்ட்டிற்கு ரூ.10.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

டீசல் விலை விபரம்

டீசல் XZ+ (S) மேனுவல் மாடலுக்கு ரூ.11.60 லட்சம் விலையும், டியூவல் டோன் தேர்வுக்கு ரூ.11.80 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. XZ+(S) ஏஎம்டி மாடலுக்கு ரூ.12.20 லட்சம் விலையும், டியூவல் டோன் வேரியண்ட்டிற்கு ரூ.12.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

Via - Team BHP

More from DriveSpark

Article Published On: Friday, April 3, 2020, 13:23 [IST]
English summary
Tata has introduced the new XZ+ (S) variant in Nexon SUV. It is offered with a factory-fitted sunroof and prices starting at Rs. 10.10 Lakh (Ex-Showroom).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+