டாடா நெக்ஸான் பாதுகாப்பானது மட்டுமல்லைங்க... அந்த விஷயத்துக்கு விருதே வாங்கியிருக்கு... என்ன தெரியுமா அது?..

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் சிறப்பு விருதை டாடா நெக்ஸான் கார் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த சுவாரஷ்ய தகவலை இப்பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் பாதுகாப்பானது மட்டுமல்லைங்க... அந்த விஷயத்துக்கு விருதே வாங்கியிருக்கு... என்ன தெரியுமா அது?..

டாடா நிறுவனத்தின் சிறப்பு மிக்க கார் மாடல்களில் டாடா நெக்ஸா எஸ்யூவியும் ஒன்று. இக்கார் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய மோதல் பரிசோதனையில் ஐந்திற்கு ஐந்து நட்சத்திரங்கள் என்ற ரேட்டிங்கைப் பெற்றது. இதற்கு, இக்கார் அதீத பாதுகாப்பு திறன் கொண்டது என்பதே அர்த்தம் ஆகும்.

டாடா நெக்ஸான் பாதுகாப்பானது மட்டுமல்லைங்க... அந்த விஷயத்துக்கு விருதே வாங்கியிருக்கு... என்ன தெரியுமா அது?..

ஆகையால், இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இது இருக்கின்றது. இந்த நிலையில் இக்கார் மேலும் சிறப்பு வாய்ந்தது என்ற புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் டாடா நெக்ஸான் அதிக பாதுகாப்பானது மட்டுமல்ல கவர்ச்சியான காரும் கூட என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

டாடா நெக்ஸான் பாதுகாப்பானது மட்டுமல்லைங்க... அந்த விஷயத்துக்கு விருதே வாங்கியிருக்கு... என்ன தெரியுமா அது?..

சிஐஐ - இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, டாடா நெக்ஸான் கவர்ச்சியான வடிவமைப்பைக் கொண்ட கார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. இது ஓர் லாப நோக்கற்ற அமைப்புடை கார் என்பதையும் அது குறிப்பிட்டுள்ளது. ஆகையால், இந்தியாவின் நான்கு சக்கர வாகன (பயணிகள் வாகனம்) பிரிவில் இக்காரே சிறப்பு வடிவமைப்பைப் பெற்ற கார் என்ற சிறப்பு அந்தஸ்தை பெற்றிருக்கின்றது.

டாடா நெக்ஸான் பாதுகாப்பானது மட்டுமல்லைங்க... அந்த விஷயத்துக்கு விருதே வாங்கியிருக்கு... என்ன தெரியுமா அது?..

இதுகுறித்த தகவலை டாடா மோட்டார்ஸின் குளோபல் டிசைன் பிரிவின் துணை தலைவர் பிரதாப் போஷ், சமூக வலைதளத்தின் வாயிலாக பகிர்ந்துள்ளார். டாடா நெக்ஸான் காரின் புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், "விருதுகளை வெல்வது எப்போதும் இனிமையானது. இதயங்களை வெல்வது இன்னும் இனிமையானது. எங்கள் அணிக்கும் இது இனிமையான ஆண்டு முடிவு" என கூறியிருந்தார்.

டாடா நெக்ஸான் பாதுகாப்பானது மட்டுமல்லைங்க... அந்த விஷயத்துக்கு விருதே வாங்கியிருக்கு... என்ன தெரியுமா அது?..

டாடா நிறுவனம், நெக்ஸான் காரை இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு மொழியிலேயே உருவாக்கி வருகின்றது. இதே வடிவமைப்பைப் பயன்படுத்தியே ஹாரியர், அல்ட்ராஸ் உள்ளிட்ட பிற புதுமுக கார்களும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், இவற்றின் முகப்பு பகுதி ஒரே மாதிரியான காட்சியளிக்கும். இருப்பினும், நெக்ஸான் கார் சிஐஐ அமைப்பின் விருதைத் தட்டிச் சென்றிருக்கின்றது.

டாடா நெக்ஸான் பாதுகாப்பானது மட்டுமல்லைங்க... அந்த விஷயத்துக்கு விருதே வாங்கியிருக்கு... என்ன தெரியுமா அது?..

டாடா நெக்ஸான், இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் காம்பாக்ட் எஸ்யூவி ரக காராகும். இக்காரில் பாதுகாப்பு வசதிகளாக ஈபிடியுடன் கூடிய ஏபிஎஸ், முன் பக்க இருக்கையாளர்களுக்கென இரு ஏர்பேக்குகள், ரோல்-ஓவர் மிடிகேஷன், பலுவை எச்சரிக்கும் சீட் பெல்ட்கள், பிரேக் டிஸ்க் தூய்மைப்படுத்தும் வசதி, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், சீட் பெல்ட் அலாரம், அதிவேக எச்சரிக்கை என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

டாடா நெக்ஸான் பாதுகாப்பானது மட்டுமல்லைங்க... அந்த விஷயத்துக்கு விருதே வாங்கியிருக்கு... என்ன தெரியுமா அது?..

இதுமட்டுமின்றி பிரீமியம் வசதிகளாக இக்காரில் எலெக்ட்ரானிக் பொத்தான் மூலம் கன்ட்ரோல் செய்யக்கூடிய சன் ரூஃப், ட்யூவல் டோன் நிறம், இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இக்கார் இந்தியாவில் ரூ. 6.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளும் இக்காரில் வழங்கப்படுகின்றன.

Most Read Articles

English summary
Tata Nexan Receives Special Award From CII. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X