20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! இது கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட

டாடா நெக்ஸான் காரின் அதீத திறன் பற்றிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட...

இந்தியாவில் டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனித்துவமான வரவேற்பு உண்டு. உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் நிறுவனம் இந்தியாவில் களமிறங்கினாலும்கூட அது டாடா நிறுவனத்திற்கு பின்னாடிதான் அமர வேண்டும். அந்தளவிற்கு இந்தியர்கள் மத்தியில் நற்மதிப்பெண்ணை டாடா பெற்றிருக்கிறது.

20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட...

இந்த நிறுவனத்தின் மிக பிரபலமான தயாரிப்பாக இருக்கின்றது நெக்ஸான். இது, இந்தியாவின் முதல் அதிக பாதுகாப்பு நிறைந்த கார் என்ற அந்தஸ்தைப் பெற்ற வாகனம் ஆகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு விபத்துகளில் அதன் உரிமையாளர்களை சிறு காயங்கள்கூட இல்லாமல் அக்கார் பாதுகாத்திருக்கின்றது.

20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட...

அவ்வாறு பெரும் விபத்தில் இருந்து பாதுகாப்பாக மீண்ட பலர் இக்காரை தங்களின் கடவுளாகவே பார்க்கின்றனற். எனவேதான் இக்காருக்கு இந்தியாவில் நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. மேலும், இதன்காரணத்தினாலயே இக்காரை கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக நெக்ஸான் (இவி) மின்சார தேர்வை வழங்கி வருகின்றது டாடா நிறுவனம்.

20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட...

இந்நிலையில் டாடா நெக்ஸான், தான் ஓர் சிறந்த பாதுகாப்பான கார் மட்டுமல்ல நல்ல திறனையும் கொண்ட கார் என்பதனை அதீத திறன் மூலம் வெளிப்படுத்தி இருக்கின்றது. ஆம், டாடா நெக்ஸான் 20 அடி நீளமுள்ள மணல் சுவற்றில் ஏறி அசாத்திய திறனை வெளிக்கொண்ர்ந்திருக்கின்றது.

இதுகுறித்து மது சந்திரா எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ பற்றிய தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

டாடா நெக்ஸான் செய்திருக்கும் இந்த சாதனையை 4X4 தொழில்நுட்பம் அடங்கிய எஸ்யூவி கார்கள்கூட சில நேரங்களில் செய்ய தடுமாறும்.

20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட...

ஆனால், மிகவும் வழக்கமான பயண்பாட்டை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் நெக்ஸான் சாவாலான வழி தடத்தை அசால்டாக கடந்திருக்கின்றது. முன்னதாகக்கூட இக்கார் ஆழம் நிறைந்த வெள்ள நீர் பாதையில் அசால்டாக சென்று, சிறந்த திறனை வெளிப்படுத்தியிருந்தது.

20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட...

இந்த நிலையிலேயே 20 அடி உயர மணல் மேட்டை டாடா நெக்ஸான் கடந்து மக்கள் மத்தியில் பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தரமான சம்பவம் நிகழ்த்தப்பட்ட இடம் எது என்பது பற்றிய உறுதியான தகவல் வெளியாகவில்லை. ஆனால், இது டாடா நெக்ஸானின் அசாத்திய செயல் ஆகும்.

20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட...

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் எந்த சிறப்பு அம்சமும் இல்லாமல், சிறு தடையைக்கூட சந்திக்காமல் அக்கார் உச்சியை எட்டியிருப்பது மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மக்களுக்கு மட்டுமில்லைங்க அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் ஆஃப் ரோடு பயண பிரியர்களுக்கும் அது வியப்பை

ஏற்படுத்தியது.

20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட...

மணல் மேட்டை மிகவும் அசால்டாக கடந்திருப்பது டாடா நெக்ஸானின் பெட்ரோல் எஞ்ஜின் வேரியண்டாகும். இதை வீடியோவை உருவாக்கியவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது நெக்ஸானின் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலாகும். 1.2 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினில் இது காணப்படுகின்றது.

20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட...

இந்த மோட்டார் அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 150 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. 20 அடி மணல் சுவற்றை கடக்க இந்த திறன் மட்டுமே போததாது என்கின்றனர் ஒரு சாரார். ஆஃப் ரோடு பயணத்திற்கேற்ற டயர்கள் ஏதேனும் அக்காரில் பொருத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் யூகிக்கின்றனர்.

20அடி உயர மணல் மலையை அசால்டாக கடந்த டாடா நெக்ஸான்! கடவுள் மட்டுமில்லைங்க அதீத திறனுடைய காரும்கூட...

ஆஃப் ரோடு சாலைக்கேற்ற டயரைக் கொண்ட கார்களால் மட்டுமே உதிரியாக இருக்கும் மணலில் ஏற முடியும். எனவேதான் கார் பிரியர்கள் பலர் நெக்ஸான் மணல் மலையை தங்கு தடையின்றி ஏறியதின் பின்னணியில் ஆஃப்-ரோடு டயரின் பங்கு இருக்கலாம் என கருதுகின்றனர். ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

அதேசமயம், மணல் மோடு சற்று திடமானதாகத் தெரிகிறது. இதனால்கூட அக்கார் தங்கு தடையின்றி ஏறியிருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும், நெக்ஸான் டாடாவின் தயாரிப்புகளிலேயே அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட காராக இருக்கின்று. இதுவும், மணல் மேட்டை சவாலின்றி கடக்க உதவியாக இருந்திருக்கும் என கருதப்படுகின்றது. இது, 209மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Nexon SUV Climbs a 20 Feet Sand Wall. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X