Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திடீரென புதிய உச்சத்தில் டாடாவின் குறிப்பிட்ட மாடல் கார்... இதுக்கு என்ன காரணம் தெரியுமா? இதோ உங்களுக்கான பதில்...
டாடா நிறுவனத்தின் குறிப்பிட்ட தயாரிப்பு திடீரென விற்பனையில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. இதற்கான காரணத்தைக் கீழே காணாலம்.

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த கார் மாடல்களில் நெக்ஸான் காரும் ஒன்று. இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி ரக காராகும். இதைவிட இக்கார் ஐந்து நட்சத்திர பாதுகாப்புமிக்க கார் என்பது கூடுதல் சிறப்பான தகவல். இத்தகைய சிறப்பு வாய்ந்த காரே தற்போது விற்பனையில் புதிய மைல் கல்லை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் காணவிருக்கின்றோம்.

டாடா மோட்டார்ஸ் இக்காரை புதுப்பிக்கப்பட்ட மாடலாக நடப்பாண்டு ஜனவரி மாதமே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் புதிய அம்சங்கள் மற்றும் சிறந்த பவர்டிரெயின் தேர்வை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இதுபோன்ற பல்வேறு சிறப்புகளின் காரணமாக இக்கார் இந்திய சந்தையில் தற்போது நல்ல வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் 2020 நவம்பர் மாத விற்பனை இருக்கின்றது. அதாவது கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இக்காரின் 6,021 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இது கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தைக் காட்டிலும் 75 சதவீத அதிக விற்பனையாகும். ஆமாங்க 2019ம் நவம்பரில் டாடா நெக்ஸான் கார் வெறும் 3,437 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகியிருந்தன.

ஆனால், நடப்பு ஆண்டிலோ அபரீதமான விற்பனை வளர்ச்சியை இக்கார் பெற்றிருக்கின்றது. இந்த புதிய விற்பனை எண்ணிக்கையால் தற்போது இந்தியாவில் நெக்ஸான் காரைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1,50,000 பேராக அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவரும் உலகின் மிக அதிகமான பாதுகாப்பான கார்களில் ஒன்றைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா நிறுவனம், நெக்ஸான் காரை இரு விதமான எஞ்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ரெவட்ரோன் டர்போ பெட்ரோல் எஞ்ஜினிலும் (இது அதிகபட்சமாக 120 பிஎஸ் மற்றும் 170 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது), 1.5 லிட்டர் 4 சிலிண்டர் ரெவ்டார்க் டீசல் எஞ்ஜின் தேர்விலும் (இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 110 பிஎஸ் மற்றும் 260 என்எம் டார்க்கை வழங்கக் கூடியது) விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

மேலும், 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய இரு விதமான வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதில் பெட்ரோல் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் டாடா நெக்ஸான் கார் ரூ. 6.99 லட்சத்தில் இருந்து ரூ. 11.34 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் தேர்வில் கிடைக்கும் நெக்ஸான் ரூ. 8.45 லட்சத்தில் இருந்து ரூ. 12.70 லட்சம் வரையிலான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

மேற்கூறிய அனைத்தும் விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த காரில் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களும் ஏராளமாக உள்ளன. ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டம், ஹெட்ராலிக் பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் டிராக்சன் கன்ட்ரோல், ரோல் ஓவர் மிடிகேஷன், பிரேக் டிஸ்க் வைப்பிங் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை இக்காரில் வழங்கப்படுகின்றன.