இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாடா கார் எதுன்னு தெரியுமா? ரொம்ப பாதுகாப்பான தயாரிப்புங்க...
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் டாடா நிறுவன கார்களின் விற்பனை குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கொரோனா அச்சம் காரணமாக மக்கள் பொது போக்குவரத்தை தவிர்ப்பது மற்றும் தீபாவளி பண்டிகை காலம் உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. மாருதி சுஸுகி போன்ற மற்ற முன்னணி நிறுவனங்களை போலவே, டாடா நிறுவன கார்களின் விற்பனையும் கடந்த அக்டோபர் மாதம் மிக சிறப்பாக இருந்தது.

டாடா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் 23,600 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடுகையில் இது 79 சதவீத வளர்ச்சியாகும். அதே சமயம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11 சதவீத வளர்ச்சியாகும். 2012ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின்பு, டாடா நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கை 23,000 யூனிட்களை கடந்துள்ளது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

டாடா நிறுவனத்தின் புதிய காரான அல்ட்ராஸ் இதற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. மேலும் பல்வேறு புதிய வசதிகளுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டியாகோ மற்றும் நெக்ஸான் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களும் விற்பனை அதிகரிப்பிற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளன. கடந்த அக்டோபர் அதிகம் விற்பனையான டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் பெற்றுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டின் தொடக்கத்தில் டியாகோ விற்பனைக்கு அறிமுகமானதில் இருந்து, அதிகம் விற்பனையாகும் டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் பெறுவது இது 3வது முறையாகும். இதற்கு முன்பாக 2019ம் ஆண்டு மே மற்றும் 2020ம் ஆண்டு மார்ச் மாதங்களில் முதல் இடத்திற்கான போட்டியில் டியாகோ வீழ்த்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு முறையும் டியாகோவை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்தது நெக்ஸான்தான். இதில், ஆச்சரியம் என்னவென்றால் கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகம் விற்பனையான டாடா கார்களின் பட்டியலில் டியாகோ மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய இரண்டு கார்களுமே டியாகோவை வீழ்த்தியுள்ளன.

டாடா நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 13,169 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு அக்டோபர் மாதம் இந்த எண்ணிக்கை 23,600 கார்களாக உயர்ந்துள்ளது. இது 79 சதவீத வளர்ச்சியாகும். மாதாந்திர அடிப்படையில் பார்த்தால் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் 21,200 கார்களை மட்டுமே டாடா விற்பனை செய்திருந்தது.

ஆனால் அக்டோபரில் இந்த எண்ணிக்கை 23,600 ஆக உயர்ந்துள்ளது. இது 11 சதவீத வளர்ச்சியாகும். ஏற்கனவே கூறியது போல் கடந்த அக்டோபரில் அதிகம் விற்பனையான டாடா கார் என்ற பெருமையை நெக்ஸான் பெற்றுள்ளது. மொத்தம் 6,888 நெக்ஸான் கார்களை டாடா நிறுவனம் கடந்த அக்டோபரில் விற்பனை செய்துள்ளது.

இரண்டாவது இடத்தை அல்ட்ராஸ் பிடித்துள்ளது. 6,730 அல்ட்ராஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் 6,083 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் டியாயோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நான்காவது இடம் டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு கிடைத்துள்ளது. 2,398 ஹாரியர் எஸ்யூவிகளை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதே சமயம் 1,501 என்ற விற்பனை எண்ணிக்கையுடன் டாடா டிகோர் 5வது இடத்தை பிடித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், நடப்பு அக்டோபர் மாதமும் சிறப்பான விற்பனை தொடரலாம். முதல் இடத்தை பிடித்துள்ள நெக்ஸான்தான், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர ரேட்டிங் வாங்கிய முதல் மேட் இன் இந்தியா கார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








