எர்டிகாவை கட்டம் கட்டிய டாடா மோட்டார்ஸ்... புதிய எம்பிவி காரை களமிறக்க திட்டம்

மாருதி எர்டிகாவுக்கு இணையான ரகத்தில் புத்தம் புதிய எம்பிவி கார் மாடலை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

எர்டிகாவை கட்டம் கட்டிய டாடா மோட்டார்ஸ்... புதிய எம்பிவி காரை களமிறக்க திட்டம்

அல்ஃபா மற்றும் ஒமேகா என்ற இரண்டு புதிய கட்டமைப்புக் கொள்கைகளின் அடிப்படையில் பல நவீன அம்சங்கள் பொருந்திய புதிய கார் மாடல்களை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி களமிறக்கி வருகிறது. இதில், 4.3 மீட்டர் நீளம் வரையிலான கார்கள் அல்ஃபா கட்டமைப்புக் கொள்கையிலும், அதற்கு மேல் நீளம் கொண்ட கார்கள் ஒமேகா பிளாட்ஃபார்மிலும் உருவாக்கப்படுகின்றன.

எர்டிகாவை கட்டம் கட்டிய டாடா மோட்டார்ஸ்... புதிய எம்பிவி காரை களமிறக்க திட்டம்

ஒமேகா பிளாட்ஃபார்மில் முதலாவது கார் மாடலாக ஹாரியர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அல்ஃபா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் அல்ட்ராஸ் கார் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அல்ஃபா மற்றும் ஒமேகா பிளாட்ஃபார்ம்களை பயன்படுத்தி மொத்தம் 14 புதிய கார் மாடல்களை களமிறக்கும் திட்டத்தை கையில் எடுத்து செயலாற்றி வருகிறது டாடா மோட்டார்ஸ்.

எர்டிகாவை கட்டம் கட்டிய டாடா மோட்டார்ஸ்... புதிய எம்பிவி காரை களமிறக்க திட்டம்

இதில், மினி எஸ்யூவி மாடல், புதிய 7 சீட்டர் எஸ்யூவி மாடல் பட்டியல் நீள்கிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் மற்றொரு தகவல் வாடிக்கையாளர்களின் ஆவலை அதிகப்படுத்தி உள்ளது. அதாவது, மாருதி எர்டிகா காருக்கு இணையான வடிவம் மற்றும் விலையில் புதிய 7 சீட்டர் எம்பிவி காரை அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாம்.

எர்டிகாவை கட்டம் கட்டிய டாடா மோட்டார்ஸ்... புதிய எம்பிவி காரை களமிறக்க திட்டம்

இந்த புதிய எம்பிவி கார் மாருதி எர்டிகா காரைவிட அதிக இடவசதியையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்குமாம். இந்த புதிய எம்பிவி காரின் அகலம் 1.8 மீட்டர் அளவுக்கு மிக தாராள இடவசதியை அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட இருக்கிறதாம்.

எர்டிகாவை கட்டம் கட்டிய டாடா மோட்டார்ஸ்... புதிய எம்பிவி காரை களமிறக்க திட்டம்

அதேபோன்று, தரை தளம் மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருக்குமாம். இதனால், நடுவில் அமர்ந்திருப்பவர்களும் சவுகரியமாக பயணிக்கும் வாய்ப்பை பெற முடியும். இந்த புதிய கார் மாடல் நிச்சயம் சிறந்த பயண உணர்வை அளிப்பதை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட இருக்கிறதாம்.

எர்டிகாவை கட்டம் கட்டிய டாடா மோட்டார்ஸ்... புதிய எம்பிவி காரை களமிறக்க திட்டம்

மாருதி எர்டிகா விலையிலும், மஹிந்திரா மராஸ்ஸோ கார் அளவுக்கு இணையான இடவசதியையும் பெற்றிருப்பதை மனதில் வைத்து இந்த காரை உருவாக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது.

எர்டிகாவை கட்டம் கட்டிய டாடா மோட்டார்ஸ்... புதிய எம்பிவி காரை களமிறக்க திட்டம்

புதிய 7 சீட்டர் எம்பிவி கார் தவிர்த்து, மாருதி வேகன் ஆர் காருக்கு இணையான புதிய ஹேட்ச்பேக் கார் மாடலையும், மிட்சைஸ் செடான் கார் மாடலையும் கூட டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

எர்டிகாவை கட்டம் கட்டிய டாடா மோட்டார்ஸ்... புதிய எம்பிவி காரை களமிறக்க திட்டம்

புதிய டாடா கார்கள் சந்தையில் மிக முக்கிய தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியாளர்களைவிட அதிக இடவசதி மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை இந்த டாடா கார்கள் பெற்றிருக்கும். விலையும் கவர்ச்சிகரமாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது.

குறிப்பு: மாதிரிக்காக டாடா ஹெக்ஸா படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Source: ACI

Most Read Articles

English summary
According to report, Tata Motors is working on all new 7 seater MPV car and it will compete with Maruti Ertiga car.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X