புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

கிரேட்டர் நொய்டாவில் நடந்து வரும் ஆட்டோ எக்ஸ்போவில் டாடா மோட்டார்ஸின் புதிய எச்பிஎக்ஸ் என்ற மினி எஸ்யூவியின் கான்செப்ட் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த புதிய மினி எஸ்யூவியின் கான்செப்ட் மாடலில் 97 சதவீதம் அளவுக்கு தயாரிப்பு நிலைக்கு உகந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

அதாவது, ஒரு சில சிறிய மாற்றங்களுடன் மிக விரைவில் தயாரிப்பு நிலை மாடலாக மேம்படுத்தி உற்பத்தி கொண்டு செல்ல முடியும். இது கான்செப்ட் மாடலாக குறிப்பிட்டாலும், பெரும்பகுதி தயாரிப்பு நிலை மாடலுக்கு உரிய அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவுத் துணைத் தலைவர் பிரதாப் போஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் எச்பிஎக்ஸ் கான்செப்ட் கார் குறித்த உருவரை படங்களை வெளியிட்டுள்ளார். அதில், சக்கரங்கள், பனி விளக்குகள், பானட் ஸ்கூப் மற்றும் சில இன்டீரியர் அம்சங்களில் சிறிய மாற்றங்களை காண முடிகிறது.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

இந்த புதிய மினி எஸ்யூவி மிக முரட்டுத்தனமான தோற்றத்துடன், சாகசப் பயணங்களுக்கு உகந்த அம்சங்களுடன் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இது மினி ஆஃப்ரோடு வாகனமாக இருந்தாலும், தயாரிப்பு நிலை மாடலானது அவ்வாறு இருக்காது என்று நம்பலாம்.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

இந்த புதிய மினி எஸ்யூவியில் எஞ்சின் சக்தி முன்புற சக்கரங்களுக்கு செலுத்தப்படும் 2 வீல் டிரைவ் மாடலாகவும், 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்ட நகர்ப்புற பயன்பாட்டு வாகனம் போல மிக ஸ்டைலாக இருக்கும்.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

புதிய எச்பிஎக்ஸ் எஸ்யூவியானது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதியய அல்ஃபா ஆர்க் கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

இந்த மினி எஸ்யூவியில் 1.2 லிட்டர் பிஎஸ்-6 தரமுடைய பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஏஎம்டி கியர்பாக்ஸ் பின்னர் எதிர்பார்க்கலாம்.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

இந்த காரில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், வலிமையான பம்பர் அமைப்புகள், பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்களுடன் இந்த மினி எஸ்யூவி இளைஞர்களை கவரும்.

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவியின் இந்திய அறிமுக விபரம்

புதிய டாடா எச்பிஎக்ஸ் மினி எஸ்யூவி கார் ரூ.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி இக்னிஸ், மஹிந்திரா கேயூவி100 கார்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 11, 2020, 13:00 [IST]
English summary
Tata Motors is planning to launch HBX mini SUV in India during the festive season this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+