போட்டி கார்களை மறைமுகமாக தாக்கி டாடா அல்ட்ராஸின் புதிய விளம்பர வீடியோ வெளியீடு...

ஹேட்ச்பேக் ரக காரான அல்ட்ராஸ் மாடலை விளம்பரப்படுத்தும் வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதியதாக வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பர வீடியோவில் டாடா அல்ட்ராஸ் காரின் ஓட்டத்துடன் அதன் போட்டி மாடல்களான மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்ஸா மாடல்களும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளன.

போட்டி கார்களை மறைமுகமாக தாக்கி டாடா அல்ட்ராஸின் புதிய விளம்பர வீடியோ வெளியீடு...

கடந்த ஜனவரி மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகமான இந்த ஹேட்ச்பேக் கார் டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்த ப்ளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு தான் இந்நிறுவனத்தின் புதிய எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது.

போட்டி கார்களை மறைமுகமாக தாக்கி டாடா அல்ட்ராஸின் புதிய விளம்பர வீடியோ வெளியீடு...

இந்த ப்ளாட்ஃபரத்தின் மூலம் தயாரிப்புகளை 3.7 மீட்டரில் இருந்து 4.3 மீட்டர் வரையிலான நீளத்தில் வடிவமைக்க இயலும். தோற்றம் மட்டுமில்லாமல் பெட்ரோல், டீசல் மற்றும் ஹைப்ரீட் போன்ற வெவ்வேறு விதமான என்ஜின் தேர்வுகளையும் கார்களில் வழங்க முடியும்.

போட்டி கார்களை மறைமுகமாக தாக்கி டாடா அல்ட்ராஸின் புதிய விளம்பர வீடியோ வெளியீடு...

தற்சமயம் டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

போட்டி கார்களை மறைமுகமாக தாக்கி டாடா அல்ட்ராஸின் புதிய விளம்பர வீடியோ வெளியீடு...

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி பவர், 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. அதேநேரம் டீசல் என்ஜின் 4000 ஆர்பிஎம்-ல் 89 பிஎச்பி பவரையும் 3,000 ஆர்பிஎம்-ல் 200 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

போட்டி கார்களை மறைமுகமாக தாக்கி டாடா அல்ட்ராஸின் புதிய விளம்பர வீடியோ வெளியீடு...

இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரு என்ஜின் தேர்வுகளுடன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினையும் விரைவில் அல்ட்ராஸ் மாடலில் கொண்டுவர டாடா நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

போட்டி கார்களை மறைமுகமாக தாக்கி டாடா அல்ட்ராஸின் புதிய விளம்பர வீடியோ வெளியீடு...

1.2 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்படவுள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி மற்றும் 140 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இந்த என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ட்யூல்-க்ளட்ச் ஆல்டோமேட்டிக் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன. அல்ட்ராஸின் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.29 லட்சமாக உள்ளது.

Most Read Articles

English summary
Tata Altroz Father's Day ad targets rivals
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X