டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய மாடலின் டீசர் வெளியீடு... இந்த மாடல்தான் வருகிறதோ?

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய மாடல் வருகையை தெரிவிக்கும் வகையில், டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய மாடலின் டீசர் வெளியீடு... இந்த மாடல்தான் வருகிறதோ?

இந்தியாவில் 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்படும் அடக்கமான வகை எஸ்யூவி மாடல்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. இந்த மார்க்கெட்டில் பல சிறந்த மாடல்கள் இருந்து வருகின்றன. மேலும், கடுமையான சந்தைப் போட்டியும் நிலவுகிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய மாடலின் டீசர் வெளியீடு... இந்த மாடல்தான் வருகிறதோ?

இதனை மனதில் வைத்து, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், அவ்வப்போது தங்களது தயாரிப்புகளில் விசேஷ அம்சங்கள் மற்றும் புதிய தேர்வுகளை கார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய மாடலின் டீசர் வெளியீடு... இந்த மாடல்தான் வருகிறதோ?

அந்த வகையில், இந்த ரக மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய மாடல் வர இருப்பது தெரிய வந்துள்ளது. டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய மாடல் அறிமுகத்தை பரைசாற்றும் விதத்தில் டீசர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய மாடலின் டீசர் வெளியீடு... இந்த மாடல்தான் வருகிறதோ?

இதன்படி, அடுத்த சில நாட்களில் அந்த புதிய மாடல் குறித்த முழுமையான விபரம் வெளியாகும் என்பது தெரிய வந்துள்ளது. தற்போதைய தகவல்களின்படி, டாடா நெக்ஸான் எஸ்யூவியில் டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதாவது, வரும் 3ந் தேதி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய மாடலின் டீசர் வெளியீடு... இந்த மாடல்தான் வருகிறதோ?

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் ஏற்கனவே 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய மாடலின் டீசர் வெளியீடு... இந்த மாடல்தான் வருகிறதோ?

ஏஎம்டி வகை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்பட்டாலும், தொழில்நுட்ப அளவில் டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மிகச் சிறந்ததாக இருக்கும். சிறந்த செயல்திறன், மென்மையான கியர் மாறறம் உள்ளிட்டவற்றிற்கு சிறப்பானதாக இருக்கும்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய மாடலின் டீசர் வெளியீடு... இந்த மாடல்தான் வருகிறதோ?

மேலும், நகரப்புற பயன்பாடு, நெடுஞ்சாலையில் நீண்ட தூர பயணம் என இரண்டிற்குமாக சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை டிசிடி கியர்பாக்ஸ் வழங்கும் என்று கூறலாம்.

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய மாடலின் டீசர் வெளியீடு... இந்த மாடல்தான் வருகிறதோ?

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 118 பிஎச்பி பவரை வழங்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 108 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், பெட்ரோல் மாடலின் டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata Motors has released new teasers for Nexon SUV and it's expected to launch of new DCT variant.
Story first published: Monday, August 31, 2020, 14:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X