கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்!

பறவையின் இறக்கைபோல் விரியும் கதவுகளுடன் இருக்கும் டாடா சியாரா மிகக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

ஒரு காலத்தில் டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடலாக கொடிக்கட்டி பறந்த மாடல்களில் டாடா சியாராவும் ஒன்று. இப்போது இக்கார் அந்நிறுவனத்தின் நினைவுச் சின்னமாக மாறியிருக்கின்றது. இக்காரின் உற்பத்தி மற்றும் விற்பனையை அந்நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தியிருந்தாலும், இந்தியர்கள் சிலர் தற்போது சியாராவைப் பயன்படுத்தி வருகின்றனர்.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

அந்தவகையில், தற்போதும் பயன்படுத்தும் நிலையில் இருக்கக்கூடிய ஓர் டாடா சியாரா காரே இப்போது விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காரை அதன் உரிமையாளர் புதிய ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை அக்காரின் உரிமையாளர் பேஸ்புக் மார்கெட் வாயிலாக பகிர்ந்துள்ளார்.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

அதில் குறிப்பிட்ட சில தகவல்களையும் சியாராவின் உரிமையாளர் பகிர்ந்துள்ளார். அது காரில் செய்யப்பட்டிருக்கும் மாற்றங்களைக் குறிக்கின்றன. அதாவது, சியாராவின் உரிமையாளர் அக்காரின் ஜன்னல் கதவு மற்றும் ஸ்டியரிங் உள்ளிட்டவற்றை நவீன யுகத்திற்கு ஏற்ப மாற்றியிருப்பதாக கூறியிருக்கின்றார். ஜன்னலுக்கு எலெக்ட்ரானிக் கன்ட்ரோலும், ஸ்டியரிங் வீலிற்கு பவர் திறனும் வழங்கப்பட்டிருக்கின்றன.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

இதேபோன்று, ஏசி மற்றும் இருக்கை உள்ளிட்டவையும் சிறப்பான ஒன்றாக நிறுவியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில், ஏசியை மிக சமீபத்திலேயே அவர் சர்வீஸ் செய்ததாகவும் தெரிவித்திருக்கின்றார். ஆகையால், ஏசி விஷயத்தைப் பொறுத்தவரை டாடா சியாராவை வாங்கும் நபர் கவலைப்பட தேவையில்லை என தெரிகின்றது.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

எனவேதான் இக்காருக்கு ரூ. 1.45 லட்சம் விலையாக அவர் நிர்ணயித்திருக்கின்றார். இதுமட்டுமின்றி வேறொரு சிறப்பு ஆஃபரையும் அவர் அறிவித்துள்ளார். அதாவது வேறு ஏதேனும் குறைந்த விலைக் காரை எக்ஸ்சேஞ்ஜ் செய்து டாடா சியாராவைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். மாருதி 800, மிட்சுபிஷி லேன்சர், ஹோண்டா சிட்டி (பழைய மாடல்) உள்ளிட்ட கார்களைக் கொண்டு எக்ஸ்சேஞ்ஜ் செய்துகொள்ளலாம் என அவர் கூறியிருக்கின்றார்.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

தற்போது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார்களிலேயே விலைக் குறைந்த காராக மாருதி 800 இருக்கின்றது. இக்காருக்கு டாடா சியாராவை எக்ஸ்சேஞ்ஜ் செய்துகொள்ள இருப்பதாக அவர் அறிவித்திருப்பது பேஸ்புக் வாசிகளையே திணற வைத்திருக்கின்றது.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

டாடா சியாரா காரில் பவர் ஸ்டியரிங், ஏசி ஆகியவற்றைப் போலவே அதன் கதவுகளும் மாடிஃபை செய்யப்பட்டிருக்கின்றன. இதன்படி டாடா சியாராவிற்கு கல்விங் எனப்படும் பறவை இறக்கைப் போல் விரியும் கதவுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. எனவே இக்காரை வாங்குவது ஒர்த்தாக இருக்கும் என வாகன பிரியர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

இக்கார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த காராகும். இங்கு கோட்டயம் எனும் பகுதியிலேயே அக்கார் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காரின் ஓடோ மீட்டர் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், நல்ல ஓடும் திறனில் இருப்பாதக அக்காரின் உரிமையாளர் பேஸ்புக் மார்க்கெட்டில் தெரிவித்திருக்கின்றார். இருப்பினும், உரிய ஆய்விற்கு பின்னர் இக்காரை வாங்குவதே சிறந்தது.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

மேலும், இந்த கார் 1997ம் ஆண்டு மாடல் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அதன் தோற்றம் நல்ல புதிய முறையில் காட்சியளிக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் அதன் உரிமையாளர் டாடா சியாராவை நல்ல முறையில் பராமரித்து வந்திருப்பது தெரிய வருகின்றது. இதற்கேற்ப காரின் எந்த மூலையிலும் சிறிய ஸ்கிராட்ச் அல்லது சொட்டைகளை நம்மால் காண முடியவில்லை.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

தொடர்ந்து, இக்காரின் பதிவும் மேலும் ஐந்து ஆண்டுகள் வரை புதுப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த கால அவகாகம் முடிந்த பின்னர் நம்மால் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அதன் பதிவை நீட்டித்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய காரையே அதன் உரிமையாளர் மிகக் குறைந்த விலையில் தற்போது விற்பனைக்கு அறிவித்துள்ளார்.

கல்விங் கதவுகளுடன் கெத்து காட்டும் டாடா சியாரா விற்பனைக்கு... யமஹா ஆர்15 பைக்கைவிட குறைந்த விலையில்..!

டாடா சியாரா ஓர் இரு கதவுகள் கொண்ட மாடால் ஆகும். இந்த ஓர் காரணத்தினால்தான் இக்கார் மக்கள் மத்தியில் பெரியளவில் பிரபலமடையவில்லை. இருப்பினும், குடும்பத்துடன் அதிகம் பயணம் செய்பவர்கள் மத்தியில் இக்கார் கணிசமான வரவேற்பைப் பெற்றது. அவ்வாறு, பல இரு தசாப்தங்களுக்கு முன்னர் மலையாள குடும்பத்தினரால் வாங்கப்பட்ட சியாரவே தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Sierra With Gullwing Door For Sale. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X