Just In
- 6 hrs ago
சூப்பர்... மஹிந்திரா நிறுவனத்தின் பாதுகாப்பான கார் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
- 7 hrs ago
ப்பா... பைக்குகள் என்ன இப்படி இருக்கு!! உலகளவில் அறிமுகமான 2021 மோட்டோ குஸ்ஸி வி9 ரோமர் & வி9 பாப்பர்
- 8 hrs ago
செம கம் பேக்... புதிய தலைமுறை மாடல் வருகைக்கு பின் தூள் கிளப்பும் ஹூண்டாய் கிரெட்டா கார் விற்பனை...
- 10 hrs ago
பிரம்மிப்பா இருக்கு... இந்த நிஸான் டீலர்ஷிப் ஒரே நாளில் இத்தனை மேக்னைட் கார்களை டெலிவரி செய்துள்ளதா?
Don't Miss!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Movies
பிக் பாஸ் ஃபினாலேவில் முகேன் ராவ்.. லீக்கான கிராண்ட் ஃபினாலே புகைப்படம்.. ஷூட் ஓவரா?
- News
பிடன் பதவியேற்பதற்கு முன்னர் விமானத்தில் பறக்க தயாராகும் ட்ரம்ப் - எங்கே குடியேறுவார் தெரியுமா
- Sports
அவர்கிட்டயே சிக்குறீங்களே.. இது தேவையா? ஆஸி. வீரரின் வலையில் ரோஹித் சர்மா!
- Finance
ரூ.12,000 கோடி வெயிட்டிங்.. இந்தியாவின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் சீனா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சொகுசு காரை மிஞ்சும் லக்சூரி வசதியுடன் டாடா சிக்னா அறிமுகம்... நாட்டின் முதல் 4X2 55 டன் டிரக்!
சொகுசு காரை மிஞ்சும் வசதிகளுடன் டாடா சிக்னா 5525.எஸ் டிரக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கனரக வாகன சந்தையில் புதிதாக 55 டன் டிரக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 4X2 ரகத்திலான டிரக்காகும். நாட்டிலேயே இந்த தரத்தில் விற்பனைக்கு வரும் முதல் கனரக வாகனம் இதுவே ஆகும். ஆகையால், ஒட்டுமொத்த கனரக வாகன சந்தையின் கவனத்தையும் இந்த புதிய டிரக் ஈர்க்கத் தொடங்கியிருக்கின்றது.

மேலும், பல்வேறு சிறப்பு வசதிகளையும் இந்த டிரக் தன்னுள் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிஎஸ்6 தரத்திலான எஞ்ஜின் மற்றும் பன்முக உள்ளமைப்புகள் (configurations) ஆகியவற்றை இந்த டிரக் வழங்குகின்றது. எனவே இந்த டிரக்கை செல்லமாக 55 டன் பிரைம் மூவர் என அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பயணிகள் வாகனத்துறையில் மட்டுமின்றி வணிக வாகன உற்பத்தியிலும் முன்னணி நபராக செயல்பட்டு வருகின்றது. இதன் வெளிப்பாடாகவே டாடா சிக்னா 5525.எஸ் பிரைம் மூவர் கன ரக வாகனத்தின் அறிமுகம் இருக்கின்றது.

டாடா சிக்னா 5525.எஸ் என பெயரடப்பட்டிருக்கும் இந்த டிரக்கில் மேலும் பல வசதிகள் மற்றும் புதிய தொழில்நுட்ப வசதிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இதன் உட்புற (கேபின்) பகுதி லக்சூரி கார்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் காட்சியளிக்கின்றது.

மிருதுவான இரு இருக்கை அமைப்பு மற்றும் படுக்கை வசதிகள் உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டிருக்கின்றன. கேபின் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த படுக்கையை ஓட்டுநர் ஓய்வெடுக்க அல்லது கூடுதலாக பயணிகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இந்த கேபின் அதிக பாதுகாப்பு திறனைக் கொண்டது என்பது கூடுதல் சிறப்பான தகவல்.

சிக்னா 5525.எஸ் கனரக வாகனத்தில் 6.7 லிட்டர் டீசல் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 250 எச்பி மற்றும் 950 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. அதிகபட்ச டார்க் திறனை 1,000 முதல் 1,800 ஆர்பிஎம்மிலும் இது வெளிப்படுத்துகின்றது. இந்த எஞ்ஜின் யூரோ6 தரத்திற்கு இணையானது ஆகும். மேலும், ஜி1150 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் காணப்படுகின்றது.

இந்த டிரக்கில் மூன்று விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவை, லைட், மீடியம் மற்றும் ஹெவி ஆகியவை ஆகும். இத்துடன், நிலப்பரப்பு மற்றும் வாகனத்தில் ஏற்றப்பட்டிருக்கும் சரக்கின் எடை ஆகியவற்றின் அடிப்படையில், தகுந்த சக்தி மற்றும் டார்க் திறன் வெளியீட்டை உறுதிப்படுத்த கியர் ஷிப்ட் ஆலோசகரும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், ஃபீளீட் எட்ஜ் எனப்படும் டாடாவின் மற்றுமொரு சிறப்பு வாய்ந்த தயாரிப்பும் இந்த டிரக்கில் பொருத்தப்பட்டிருக்கின்றது. அது, கனரக வாகனத்தின் உரிமையாளருக்கு அதிக லாபத்தை ஏற்படுத்திக் கொடுக்க உதவும். 51T, 52T, 53T, 54T மற்றும் 55T ஆகிய உள்ளமைப்புகளுடன் இந்த டிரக் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது நாட்டின் அதிகம் விற்பனையாகும் வர்த்தக வாகனங்களில் சிக்னா வரிசையில் இருக்கும் கனரக வாகனங்களும் ஒன்றாக இருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையிலேயே சிக்னா 5525.எஸ் கனரக டிரக்கை டாடா அறிமுகப்படுத்தியுள்ளது. டிரைவர் இருக்கையை மூன்று வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுமட்டுமின்றி, அதிக இடவசதி மற்றும் டெலிஸ்கோபிக் ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவை இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இத்துடன், அதிக திறன் வாய்ந்த ஏசி சிஸ்டமும் டிரக்கின் கேபினுக்குள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. மேலும், ஆம்பிசியன்ட் ஏர் டெம்ப்ரேச்சர் சென்சார், பிளைண்ட் ஸ்பாட்டை நீக்கும் இருவிதமான ரியர் வியூ கண்ணாடிக்கள், எஞ்ஜின் பிரேக்கிங் மற்றும் ஐசிஜிடி பிரேக்கிங் சிஸ்ட்ம் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றிருக்கின்றன.

இந்த வசதிகள் மட்டுமின்றி குறிப்பிட்ட சில சலுகைகளையும் டாடா வழங்க திட்டமிட்டுள்ளது. 6 வருடங்கள் அள்லது 6 லட்சம் கிமீ எனும் தேசிய அளவிலான வாரண்டி சிக்னா டிரக்கிற்கு வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன், ஓட்டுநர் நலன், நேர உத்தரவாதம், ஆன்-சைட் சேவையை உறுதிப்படுத்த பல்வேறு திட்டங்களையும் நிறுவனம் வழங்குகிறது.
குறிப்பு: 7 முதல் 11 வரையிலான புகைப்படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை.