பயணிகளின் பாதுகாப்பில் உங்களை விட நாங்கதான் டாப்!! ஹூண்டாயை நேரடியாக வம்பிழுத்த டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் விற்பனையில் உள்ள கார்களின் பாதுகாப்பு மதிப்பெண்கள் குறித்த விபரங்கள் வெளியானதை தொடர்ந்து தனது போட்டி நிறுவனங்களை கலாய்ப்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர் கதையாக செய்துகிறது.

பயணிகளின் பாதுகாப்பில் உங்களை விட நாங்கதான் டாப்!! ஹூண்டாயை நேரடியாக வம்பிழுத்த டாடா மோட்டார்ஸ்

முன்னதாக கடந்த வாரத்தில் மாருதி சுஸுகி எஸ்-பிரேஸ்ஸோ காரின் பூஜ்ஜிய பாதுகாப்பு மதிப்பீட்டை வெகுவாக இகழ்ந்து தள்ளி இருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது ஹூண்டாய் க்ராண்ட் ஐ20 நியோஸ் காரின் 5-க்கு 2 என்ற மதிப்பீட்டை கலாய்த்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பில் உங்களை விட நாங்கதான் டாப்!! ஹூண்டாயை நேரடியாக வம்பிழுத்த டாடா மோட்டார்ஸ்

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார் உடனும் டாடா நிறுவனம் அதன் டியாகோ கார் மாடலை ஒப்பிட்டு பதிவு ஒன்றை அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஏனெனில் டாடாவின் டியாகோ ஹேட்ச்பேக் கார் பாதுகாப்பு சோதனையில் 4 மதிப்பீட்டை பெற்றுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பில் உங்களை விட நாங்கதான் டாப்!! ஹூண்டாயை நேரடியாக வம்பிழுத்த டாடா மோட்டார்ஸ்

இந்த டிவிட்டர் பதிவில் கிராண்ட் ஐ10 நியோஸின் 2 மதிப்பெண்கள், ஐ10 மற்றும் ஐ20 கார்களின் ‘i' எழுத்தின் டிசைனில் வழங்கப்பட்டுள்ளது. இதுதான் நேரடியாக ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸை காரை குறிப்பதுபோல் உள்ளது.

பயணிகளின் பாதுகாப்பில் உங்களை விட நாங்கதான் டாப்!! ஹூண்டாயை நேரடியாக வம்பிழுத்த டாடா மோட்டார்ஸ்

"குறிப்புகளில் க்ராண்ட் என்ற வார்த்தை இருந்தால் உங்களால் வாவ் என்று மட்டும் தான் கூற முடியும், உண்மையில் பயணம் அட்டகாசமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்றால், உங்களது பயணத்தை பிரிவில் பாதுகாப்புமிக்க, உலகளாவிய என்கேப் பாதுகாப்பு சோதனையில் 4 மதிப்பெண்கள் பெற்ற புதிய டியாகோவில் மேற்கொள்ளுங்கள்" என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பில் உங்களை விட நாங்கதான் டாப்!! ஹூண்டாயை நேரடியாக வம்பிழுத்த டாடா மோட்டார்ஸ்

2014ல் இருந்து உலகளாவிய என்கேப் அமைப்பு இந்திய கார்களின் மோதல் சோதனை முடிவுகளை வெளியிட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த சோதனைகளில் மாருதி பூஜ்ஜிய மதிப்பெண்ணை பெற்றது. அதேபோல் சமீபத்தில் மாருதியின் எஸ்-பிரேஸ்ஸோ பாதுகாப்பில் பூஜ்ஜிய மதிப்பெண்ணை பெற்று அதிர்ச்சியாக்கியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பில் உங்களை விட நாங்கதான் டாப்!! ஹூண்டாயை நேரடியாக வம்பிழுத்த டாடா மோட்டார்ஸ்

ஆனால் இதற்கு இடையில் விட்டாரா பிரெஸ்ஸா (4 நட்சத்திரம்), எர்டிகா (3 நட்சத்திரம்), ஸ்விஃப்ட் (2 நட்சத்திரம்) என மாருதி கார்கள் ஓரளவு நல்ல மதிப்பெண்களையே பெற்று வந்துள்ளன. டாடாவை பொறுத்தவரையில் ஹெரியரை தவிர்த்து கிட்டத்தட்ட அனைத்து கார்களையும் இந்த சோதனைகளில் டாடா மோட்டார்ஸ் உட்படுத்தி வருகிறது.

பயணிகளின் பாதுகாப்பில் உங்களை விட நாங்கதான் டாப்!! ஹூண்டாயை நேரடியாக வம்பிழுத்த டாடா மோட்டார்ஸ்

இதில் அனைவரையும் கவரும் விதமான டாடா அல்ட்ராஸ் மற்றும் நெக்ஸான் கார்கள் 5 மதிப்பெண்களையும், டிகோர் & டியாகோ கார்கள் 4 மதிப்பெண்களையும் பெற்றுள்ளன. இதன் எதிரொலியாகவே டாடா கார்கள் என்றாலே பாதுகாப்புமிக்கவை என்ற கருத்து உலா வந்து கொண்டிருக்கிறது.

பயணிகளின் பாதுகாப்பில் உங்களை விட நாங்கதான் டாப்!! ஹூண்டாயை நேரடியாக வம்பிழுத்த டாடா மோட்டார்ஸ்

டாடா கார்களை தவிர்த்து இத்தகைய பாதுகாப்பு மதிப்பீடுகள் வேறெந்த நிறுவனத்தின் கார்களின் விற்பனையிலும் தலையீடுவதில்லை. அதாவது பாதுகாப்பு விஷயங்களில் பூஜ்ஜிய மதிப்பீடுகளை பெற்றாலும், மாருதி நிறுவனம் தான் நம்பர்-1 இந்திய கார் தயாரிப்பு நிறுவனமாக தற்சமயம் உள்ளது.

பயணிகளின் பாதுகாப்பில் உங்களை விட நாங்கதான் டாப்!! ஹூண்டாயை நேரடியாக வம்பிழுத்த டாடா மோட்டார்ஸ்

அதேபோல் பெரியவர்களின் பாதுகாப்பில் 5 நட்சத்திரம் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் 4 நட்சத்திரம் என பாதுகாப்பு அம்சங்களில் ஜொலிக்கும் மஹிந்திராவின் எக்ஸ்யூவி300 காருக்கு இதனை காட்டிலும் குறைவான பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஹூண்டாய் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி கார் விற்பனையில் கடுமையான போட்டியினை கொடுத்து வருகிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

Most Read Articles

English summary
Tata Motors Trolls Hyundai Grand i10
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X