டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இன்று (ஜனவரி 22) மிகவும் பிஸியான நாளாக அமைந்துள்ளது. ஏனெனில் பல்வேறு புதிய தயாரிப்புகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரை டாடா இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

மேலும் குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் மேட் இன் இந்தியா காரான நெக்ஸானின் அப்டேட் செய்யப்பட்ட 2020 மாடலையும் டாடா மோட்டார்ஸ் இன்று விற்பனைக்கு கொண்டு வந்தது. இதுதவிர டியாகோ (Tata Tiago) மற்றும் டிகோர் (Tata Tigor) கார்களின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் இன்று அறிமுகம் செய்துள்ளது.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டாடா டியாகோ மற்றும் டாடா டிகோர் கார்களின் விலை முறையே 4.6 லட்ச ரூபாய் மற்றும் 5.75 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இவ்விரு கார்களின் ஆரம்ப எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஃபேஸ்ஃலிப்ட்டிற்கு முந்தைய பிஎஸ்-4 மாடல்களுடன் ஒப்பிடும்போது தற்போது ஆரம்ப விலை முறையே 20 ஆயிரம் ரூபாய் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இதில், டாடா டியாகோ ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். அதே சமயம் டாடா டிகோர் செடான் ரக கார் ஆகும். டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் பானெட் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவில் அமலுக்கு வரவுள்ள பாதசாரிகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு (Pedestrian Safety Norms) இணங்குவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

அதே சமயம் டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் பின்பகுதி ரீடிசைன் செய்யப்பட்ட பம்பரை பெற்றுள்ளன. அத்துடன் உட்புறத்திலும் சிறிய அளவில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான காஸ்மெட்டிக் அப்டேட்டுகள் தவிர, பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான பெட்ரோல் இன்ஜின்களையும், டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்கள் தற்போது பெற்றுள்ளன.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில், 1.2 லிட்டர், மூன்று-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமான இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன் உடன் இந்த இன்ஜின் கிடைக்கும். அதே சமயம் டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் வருகை, டாடாவின் 1.05 லிட்டர் டீசல் இன்ஜின் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஆம், லைன் அப்பில் இருந்து இந்த இன்ஜின் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இந்த இன்ஜினை பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தினால், விலை கணிசமாக அதிகரித்து விடும். எனவே போதிய அளவிற்கு லாபம் இருக்காது என்பதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

பிஎஸ்-4 பெட்ரோல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு ஆகும் செலவை காட்டிலும், பிஎஸ்-4 டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வதற்கு ஆகும் செலவு மிகவும் அதிகம். எனவே சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை நிறுத்தி விட பல்வேறு நிறுவனங்களும் முடிவு செய்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

இதனிடையே டாடா டிகோர் கார், புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டிஆர்எல்கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்டை பெற்றுள்ளது. அதே சமயம் இரண்டு கார்களிலும் ஸ்டாண்டர்டு பாதுகாப்பு வசதிகளாக ட்யூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ், கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

டாடா டியாகோ, டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?

அதே சமயம் டாப் ஸ்பெக் டியாகோ மற்றும் டிகோர் XZ+ மாடல்கள், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன், ஹார்மன் ஆடியோ சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், 15 இன்ச் அலாய் வீல்கள் ஆகிய வசதிகளை பெற்றுள்ளன.

Most Read Articles

English summary
Tata Tiago, Tigor Facelift Launched In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X