டியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்...

டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்டி வேரியண்ட்டில் புதியதாக வழங்கப்பட்டுள்ள வசதிகள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

டியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்...

சந்தையின் தேவையை பொறுத்து விற்பனை மாடல்களில் அப்கிரேட்களை வழங்குவதும், சில வசதிகளை நீக்குவதும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில வருடங்களாக படு பிசியாக செயல்பட்டு வருகிறது.

டியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்...

இந்த வகையில் இந்நிறுவனத்தின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காரான டியாகோவிற்கு சில புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முக்கியமாக டியாகோவின் மிட்-ரேஞ்ச் வேரியண்ட்டான எக்ஸ்டி தான் புதிய வசதிகளை பெற்றுள்ளது.

டியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்...

பொதுவாக டியாகோவின் எக்ஸ்டி ட்ரிம்மில் ஆடியோ மற்றும் அழைப்பேசி அழைப்புகளை கண்ட்ரோல் செய்யும் வசதி ஸ்டேரிங் சக்கரத்தில் வழங்கப்படுவது இல்லை. ஆனால் தற்போது டாடா டீலர்கள் மூலமாக கிடைத்துள்ள அப்டேட் செய்யப்பட்ட ஆவண படங்களில் இத்தகைய ஸ்டேரிங் கண்ட்ரோல்களை எக்ஸ்டி ட்ரிம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்...

இந்த வசதியை ஆரம்பத்தில் இருந்தே டியாகோவின் எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்+ வேரியண்ட்கள் பெற்றுவந்தன. தற்போது இது எக்ஸ்டி-க்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஸ்டேரிங்கில் வழங்கப்படும் ஆடியோ கண்ட்ரோல் தற்போதைய மாடர்ன் காலக்கட்டத்தில் மிகவும் அவசியாமான ஒன்றாக விளங்குகிறது.

டியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்...

இத்தகைய கண்ட்ரோல், ஸ்டேரிங் சக்கரத்தில் கையை எடுக்காமலேயே காரின் ஆடியோ சிஸ்டம் மற்றும் மொபைல் போனுக்கு வரும் அழைப்புகளை ஓட்டுனர் கண்ட்ரோல் செய்ய வழிவகை செய்கிறது. இந்த புதிய வசதி சேர்க்கப்பட்ட அதேநேரம் எக்ஸ்டி ட்ரிம்மில் காரின் பின்பக்கத்தில் வழங்கப்பட்டு வந்த பார்சல் செல்ஃப் ட்ரே நீக்கப்பட்டுள்ளது.

டியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்...

இத்தகைய அப்டேட்களினால் டியாகோ எக்ஸ்டி ட்ரிம்மின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.1,000 அதிகரிக்கப்படவுள்ளதாக டீலர்ஷிப்களில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு எதுவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை.

டியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்...

ஏனெனில் டீலர்ஷிப் ஷோரூம்களில் ஸ்டாக்கில் உள்ள ஸ்டேரிங் கண்ட்ரோல் இல்லாத டியாகோ எக்ஸ்டி ட்ரிம்கள் முழுவதும் விற்று தீர்க்கப்பட்ட பின்னரே இந்த அப்கிரேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதனால் இன்னும் சில நாட்களில் இதுகுறித்த அறிவிப்பை டாடா நிறுவனத்தில் இருந்து எதிர்பார்க்கலாம்.

டியாகோ எக்ஸ்டி காரில் ஸ்டேரிங் ஆடியோ கண்ட்ரோல் வசதி... அதிரடியாக கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்...

5 மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 3 ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் என மொத்தம் 8 விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்படும் டாடா டியாகோவின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.4.7 லட்சமாக (எக்ஸ்இ மேனுவல்) உள்ளது. அதுவே டாப் எக்ஸ்இசட்ஏ+ டிடி (ஏஎம்டி) ட்ரிம்மின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.6.74 லட்சமாக உள்ளது.

Most Read Articles

English summary
Tata Tiago XT Variant Gets Feature Update – Steering Mounted Controls
Story first published: Monday, October 12, 2020, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X