டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வருகிறது 2021 டாடா டிகோர் செடான் கார்!! மும்பையில் சோதனை ஓட்டம்..

டாடா மோட்டார்ஸின் 2021ஆம் வருடத்திற்கான டிகோர் டர்போ பெட்ரோல் வேரியண்ட் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வருகிறது 2021 டாடா டிகோர் செடான் கார்!! மும்பையில் சோதனை ஓட்டம்..

இந்தியாவில் முக்கிய அப்கிரேட்களை அவ்வப்போது பெற்றுவரும் காம்பெக்ட் செடான் கார்களுள் டாடா டிகோரும் ஒன்று. இந்த வகையில் டர்போ பெட்ரோல் என்ஜினை இந்த கார் விரைவில் ஏற்கவுள்ளது.

டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வருகிறது 2021 டாடா டிகோர் செடான் கார்!! மும்பையில் சோதனை ஓட்டம்..

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன்தான் தற்போது டிகோர் முழு மறைப்புடன் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்லேன் செய்திதளம் மூலம் கிடைத்துள்ள இதுகுறித்த ஸ்பை வீடியோ மும்பையில் காட்சிப்படுத்த பட்டுள்ளது.

டாடாவின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான நெக்ஸானை தொடர்ந்து 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை டிகோர் பெறவுள்ளது. ஆனால் டிகோர் அதிகப்பட்சமாக 112 பிஎச்பி மற்றும் 150 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த டர்போ என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வருகிறது 2021 டாடா டிகோர் செடான் கார்!! மும்பையில் சோதனை ஓட்டம்..

இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இந்த ஸ்பை வீடியோவில் சோதனை கார் மறைக்கப்பட்டிருந்தாலும், வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் வழக்கமான டிகோருக்கு அதன் புதிய டர்போ மாடலுக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இருக்காது. உயரமும் வேண்டுமென்றால் சிறிது குறைக்கப்படலாம்.

டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வருகிறது 2021 டாடா டிகோர் செடான் கார்!! மும்பையில் சோதனை ஓட்டம்..

சில மாதங்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஜெயம் ஆட்டோமோட்டிவ்வை கையப்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது ஜேஎஸ்டிவியில் 100 சதவீதத்தை பெற்றுவிட்டது. இதன் விளைவாக டிகோர் மற்றும் டியாகோ கார்களில் ஜேடிபி என்ற பெயரில் டர்போசார்ஜ்டு என்ஜின் வழங்கப்பட்டது.

டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் வருகிறது 2021 டாடா டிகோர் செடான் கார்!! மும்பையில் சோதனை ஓட்டம்..

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த இரு டர்போ மாடல்களும் இந்த 2020ஆம் ஆண்டின் ஜூன் மாதத்தில் நிறுத்தப்பட்டுவிட்டன. டிகோர் ஜேடிபி-இல் வழங்கப்பட்ட கிராஃபிக்ஸ் மற்றும் டிகோல்களை இந்த டர்போ வேரியண்ட்டிலும் எதிர்பார்க்கலாம். டியாகோ உடன் டிகோருக்கு டர்போ வேரியண்ட்டின் அறிமுகம் அடுத்த ஆண்டில் இருக்கலாம்.

Most Read Articles
English summary
2021 Tata Tigor Turbo Petrol Variant Spied Testing – Hyundai Aura Rival
Story first published: Monday, December 7, 2020, 19:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X