Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 2 hrs ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- News
"ரொம்ப கஷ்டப்பட்டோம்.." கொரோனா தடுப்பூசி பணியை துவங்கியபோது.. நாக்கு தழுதழுத்து, கண்கள் பனித்த மோடி!
- Movies
அடடா.. வனிதா வீட்டுல திரும்பவும் விசேஷமாம்.. போட்டோவுடன் ஹேப்பி போஸ்ட்!
- Lifestyle
உங்க மனைவிகிட்ட இந்த வித்தியாசங்கள் தெரிஞ்சா அவங்க உங்கள சந்தேகப்பட தொடங்கிட்டாங்கனு அர்த்தமாம்...!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாருதி எர்டிகாவின் ஆதிக்கத்தை முறியடிக்க அட்டகாசமான தோற்றத்தில் வருகிறது டாடாவின் புதிய எம்பிவி கார்
மாருதி சுசுகி எர்டிகாவிற்கு போட்டியளிக்கும் வகையில் புதிய எம்பிவி காரின் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த எதிர்கால எம்பிவி கார் குறித்த விபரங்கள் எதையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. ஆனால் இந்த கார் குறித்து டீம்பிஎச்பி செய்தி தளம் வெளியிட்டு செய்தியில் இந்த கார் 2022ல் இந்தியாவில் அறிமுகமாகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வகையில் பார்த்தோமேயானால் டாடாவின் இந்த எம்பிவி கார் வரும் பண்டிக்கை காலத்தில் இருந்து சோதனைகளை ஆரம்பிக்கும் என தெரிகிறது. மேலும் இதன் அறிமுகம் டாடாவின் ஹார்ன்பில் மைக்ரோ-எஸ்யூவி காருக்கு அடுத்தப்படியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் ஆல்ஃபா கட்டமைப்பின் அடிப்படையில் தோற்றத்தை பெறலாம் என கூறப்படுகின்ற இந்த எதிர்கால எம்பிவி காரில் 8 மற்றும் 7 என இரு விதமான இருக்கை அமைப்புகள் வழங்கப்படலாம். இந்த இரு இருக்கை அமைப்புகளிலும் கேப்டன் இருக்கைகள் நடு இருக்கை வரிசையில் இருக்கும்.

சந்தையில் தற்சமயம் விற்பனையில் உள்ள அனைத்து எம்பிவி கார்களில் இருந்தும் வேறுப்பட்டு தெரிவதற்காகவும் கம்பீரமாக தோற்றத்திற்காகவும் டாடா நிறுவனம் இந்த எம்பிவி காரில் ப்ராண்ட்டின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியை பயன்படுத்தும் என நம்பலாம். அதேபோல் உட்புறத்திலும் இந்த கார் ப்ராண்ட்டின் நவீன கனெக்டட் தொழிற்நுட்பங்களை நிச்சயம் பெற்றுவரும்.

இதனுடன் வேறுப்பட்ட ஸ்மார்ட்போன் இணைப்புடன் லேட்டஸ்ட் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் சில ட்ரைவிங் மோட்களையும் இந்த டாடா எம்பிவி காரில் எதிர்பார்க்கலாம்.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு ஒரே ஒரு டீசல் என்ஜின் தேர்வை மட்டுமே இந்த கார் கொண்டிருக்கும் என தகவல்கள் வெளிவந்துள்ளன. 1.5 லிட்டரில் டர்போசார்ஜ்டு செய்யப்பட்டதாக டாடா நெக்ஸான் காரில் இருந்து வழங்கப்படலாம் என கூறப்படும் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 108 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்படலாம்.

மற்றப்படி இதன் பெட்ரோல் வேரியண்ட் குறித்த எந்த தகவலும் இல்லை. அப்படியே பெட்ரோல் வேரியண்ட்டை பெற்றாலும் அதில் அல்ட்ராஸின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் இந்த கார் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடாவின் இந்த எம்பிவி காருக்கு மாருதியின் எர்டிகா மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனத்தின் மராஸ்ஸோ மாடலும் போட்டியாக விளங்கும். மேலும் சந்தையில் எம்பிவி பிரிவில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களில் இருந்தும் விரைவில் புதிய தயாரிப்பு மாடல்கள் அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.