குடியரசு தினத்தில் தரமான சம்பவம் காத்திருக்கு... வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த டாடா...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கிராவிட்டாஸ் எஸ்யூவியை குடியரசு தினத்தன்று வெளியிடவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குடியரசு தினத்தில் தரமான சம்பவம் காத்திருக்கு... வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த டாடா...

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி வரும் ஜனவரி 26ம் தேதி வெளியிடப்படுகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த தகவலை இன்று (டிசம்பர் 29) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கிராவிட்டாஸ் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்திருந்தது.

குடியரசு தினத்தில் தரமான சம்பவம் காத்திருக்கு... வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த டாடா...

இதை தொடர்ந்து நடப்பாண்டிலேயே டாடா கிராவிட்டாஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட பிரச்னைகளால் அதன் அறிமுகம் அடுத்த ஆண்டிற்கு தள்ளி போயுள்ளது. ஒரு வழியாக கிராவிட்டாஸ் பொது பார்வைக்கு கொண்டு வரப்படவுள்ள தேதியை டாடா மோட்டார்ஸ் தற்போது அறிவித்துள்ளது.

குடியரசு தினத்தில் தரமான சம்பவம் காத்திருக்கு... வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த டாடா...

ஜனவரி இறுதியில் வெளியிடப்படவுள்ள நிலையில், பிப்ரவரி மாதம் டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்திய சந்தையில் விற்பனையில் இருந்து வரும் டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் வெர்ஷன்தான் டாடா கிராவிட்டாஸ். ஆனால் 7 சீட்டர் மட்டுமல்லாது 6 சீட்டர் வெர்ஷனிலும் கிராவிட்டாஸ் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

குடியரசு தினத்தில் தரமான சம்பவம் காத்திருக்கு... வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த டாடா...

டாடா கிராவிட்டாஸ் மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொண்டதாக விற்பனைக்கு வரவுள்ளது. எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் மற்றும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500, 7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா உள்ளிட்ட கார்களுடன், டாடா கிராவிட்டாஸ் போட்டியிடும்.

குடியரசு தினத்தில் தரமான சம்பவம் காத்திருக்கு... வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த டாடா...

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி காரில், 2 லிட்டர் கிரையோடெக் டீசல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இந்த இன்ஜின் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள், டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவியில் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு தினத்தில் தரமான சம்பவம் காத்திருக்கு... வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த டாடா...

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவியின் விலை 13 லட்ச ரூபாயில் இருந்து தொடங்கலாம் என கூறப்படுகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஜனவரி இறுதியில் வெளியிடப்படும்போது டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி குறித்த பல்வேறு தகவல்கள் தெரியவரும். ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான் விலைகள் அறிவிக்கப்படும்.

குடியரசு தினத்தில் தரமான சம்பவம் காத்திருக்கு... வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த டாடா...

டாடா கிராவிட்டாஸ் எஸ்யூவி கார் இந்திய சாலைகளில் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. வெகு சமீபத்தில் கூட மறைப்புகள் எதுவும் இல்லாமல் கேமரா கண்களில் இந்த எஸ்யூவி சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது கிராவிட்டாஸ் எஸ்யூவியின் பின் பகுதியை நம்மால் தெளிவாக பார்க்க முடிந்தது.

குடியரசு தினத்தில் தரமான சம்பவம் காத்திருக்கு... வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்த டாடா...

டாடா நிறுவனம் 2021ம் ஆண்டு பல்வேறு புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், கிராவிட்டாஸ் எஸ்யூவியும் ஒன்று. ஆனால் கிராவிட்டாஸ் எஸ்யூவிக்கு முன்னதாக வரும் ஜனவரி மாதத்தில், அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை டாடா விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

English summary
Tata To Unveil Gravitas In January - Here Are All The Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X