கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

vடாடா நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ள 7 சீட்டர் மாடல் கிரவிடஸ் காரை 2020 வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

இந்திய வாகன உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் டாடா நிறுவனம் அதன் ஏழு இருக்கைக் கொண்ட புத்தம் புதிய கிராவிடஸ் என்ற காரை 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் வாகன கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இம்முறை 2020ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்று வருகின்றது.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

இங்கு உலகளாவிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் புத்தம் புதிய தயாரிப்புகள் மற்றும் எதிர்கால தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், டாடாவும் அதன் புதிய கிராவிடஸ் காரை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கார் விரைவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட உள்ள நிலையில், ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

இந்த காரின் மிகச் சிறப்பான விஷயமாக மூன்று இருக்கை வரிசை மற்றும் ஏழு பேர் வரை அமர்ந்து செல்லும் வசதி காணப்படுகின்றது. இத்துடன், இந்த கார் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானது என்பது கூடுதல் சிறப்பு.

இதுமட்டுமின்றி, இந்த காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் இடம்பெற்றிருக்கின்றது. இந்த கார் நடப்பாண்டின் ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஷோரூம்களில் காட்சிக்குள்ளாகும் என தகவல் தெரிவிக்கின்றன.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

டாடா நிறுவனம் இந்த புத்தம் புதிய காரை அதன் பிரபல ஹாரியர் மாடலைவிட சற்று நீளமானதாக தயாரித்திருக்கின்றது. மேலும், அகலமும் இதை விடு சற்று அதிகமாக காணப்படுகின்று. ஆனால், உயரம் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் ஒரே அளவைக் கொண்டுள்ளது.

இதனால், தற்போது விற்பனையில் இருக்கும் ஹாரியர் எஸ்யூவி-யைக் காட்டிலும், இடவசதியில் கூடுதலாகவே கிராவிடஸ் காட்சியளிக்கின்றது.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

இதுமட்டுமின்றி, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமான 2.0 லிட்டர் கிரையோடெக் எஞ்ஜின் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எஃப்சிஏவின் மல்டிஜெட் திறன் கொண்ட இந்த எஞ்ஜின் 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க்கையம் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

தொடர்ந்து, நாம் மேலே கூறியதைப் போன்று 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இது கிடைக்கும். இதே திறன் கொண்ட எஞ்ஜின்கள்தான் ஹூண்டாயின் சில பிரபல தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றது.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

இதுமட்டுமின்றி, சாலையில் செல்லும்போது அநேகரைக் கவர்கின்ற வகையில் கவர்ச்சியான லுக்கையும் இந்த காருக்கு டாடா வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த காரின் க்ரில் மற்றும் எல்இடி ஹெட்லேம்ப் படு அமர்களமான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது.

இருப்பினும், இந்த புதிய கார் ஹாரியர் எஸ்யூவி-யின் தோற்றத்திலேயே காட்சியளிக்கின்றது. ஆனால், ரூஃப் மற்றும் திடகாத்திடமான உடல் தோற்றம் லேசான வித்தியாசத்தை வழங்குகின்றது.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

தொடர்ந்து, காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக 18 இன்சிலான அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, தொழில்நுட்ப வசதியாக 8.8 இன்ச் கொண்ட தொடு திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதி இணைக்கப்பட்டிருக்கின்றது.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

இவற்றுடன், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் சிஸ்டம், டெர்ரயின் மோட்கள், டிரைவிங் மோட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், மல்டி கலர் டிஸ்பிளே மற்றும் புஸ்-பட்டன் ஸ்டார்ட் என பிரிமியம் வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, பயணிகள் நேரடியாக விண்ணை ரசிப்பதற்காக சன் ரூஃப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

இதுதவிர, பாதுகாப்பு வசதியிலும் இந்த கிராவிடஸ் அதிசிறப்பு வாய்ந்ததாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக 6 ஏர் பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் வியூ கேமிரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி சிஸ்டம், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டெசண்ட் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் காணப்படுகின்றது.

ஆகையால், டாடாவின் இந்த புதிய கிராவிடஸ் பிரிமியம் வசதியில் மட்டுமின்றி பாதுகாப்பிலும் தலை சிறந்த காராக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கலைகட்டும் ஆட்டோ எக்ஸ்போ 2020: சிறப்பான 7 சீட்டர் காரை அறிமுகம் செய்த டாடா..!

இந்த ஏழு இருக்க வசதிகொண்ட கிராவிடஸ், டாடா ஹாரியரை காட்டிலும் ரூ. 1 லட்சம் அதிகமான விலையில் விற்பனைக்கு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஹாரியர் எஸ்யூவி கார்கள் தற்போது 13.44 லட்சம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

இந்த கார்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் புதிய வரவாக களமிறங்க இருக்கும் எம்ஜி ஹெக்டர் 6 கார்களுக்கு போட்டியாக அறிமுகமாக உள்ளது.

Most Read Articles

English summary
Tata Unveils Gravitas7 Seater In 2020 Auto Expo. Read In tamil.
Story first published: Wednesday, February 5, 2020, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X