அல்லு அர்ஜூன் கிட்ட இப்படி ஒரு காரா? இதோட விலை எவ்ளோ சொன்னா நம்பவே மாட்டீங்க... ஏன்னா, அவ்ளோ அதிகம்!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் விலையுயர்ந்த காரில் செல்லும்போது கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றார். இவர் பயன்படுத்திய சொகுசு கார் பற்றிய சிறப்பு தகவலை இப்பதிவில் காணலாம்.

அல்லு அர்ஜூன் கிட்ட இப்படி ஒரு காரா? இதோட விலை எவ்ளோ சொன்னா நம்பவே மாட்டீங்க... ஏன்னா, அவ்ளோ அதிகம்!

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் அல்லு அர்ஜூனும் ஒருவர். இவரே விலையுயர்ந்த சொகுசு காரில் குடும்பத்துடன் பயணிக்கும்போது கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றார். இவர் பயன்படுத்தியிருக்கும் கார் விலையுயர்ந்தது மட்டுமில்லைங்க அதி-நவீன சொகுசு வசதிகளையும் கொண்டதாக இருக்கின்றது.

அல்லு அர்ஜூன் கிட்ட இப்படி ஒரு காரா? இதோட விலை எவ்ளோ சொன்னா நம்பவே மாட்டீங்க... ஏன்னா, அவ்ளோ அதிகம்!

எனவேதான் அல்லு அர்ஜூனின் இந்த பயணம் தற்போது வாகன உலகின் தலைப்பு செய்தியாக மாறியிருக்கின்றது. இவர் பயன்படுத்தியது பென்ட்லீ நிறுவனத்தின் கான்டினென்டல் ஜிடி சொகுசு காராகும். இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 3.64 கோடியாகும். இது மேற்கூரை இல்லாத கன்வர்டபிள் வேரியண்டின் விலை ஆகும்.

அல்லு அர்ஜூன் கிட்ட இப்படி ஒரு காரா? இதோட விலை எவ்ளோ சொன்னா நம்பவே மாட்டீங்க... ஏன்னா, அவ்ளோ அதிகம்!

இதன் வழக்கமான மாடலின் விலை ரூ. 3.29 கோடிகளுக்கு விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்தகைய விலையுயர்ந்த காரிலேயே தனது குடும்பத்தினருடன் அல்லு அர்ஜூன் சென்றிருக்கின்றார். அப்போது க்ளிக் செய்யப்பட்ட படமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அல்லு அர்ஜூன் கிட்ட இப்படி ஒரு காரா? இதோட விலை எவ்ளோ சொன்னா நம்பவே மாட்டீங்க... ஏன்னா, அவ்ளோ அதிகம்!

இந்த புகைப்படம் வெளியாகி ஒரு சில நாட்களாகின்றநிலையில், தற்போதே அந்த படங்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. அல்லு அர்ஜூன் பல்வேறு விதமான லக்சூரி கார்களைப் பயன்படுத்தி வருகின்றார். அந்தவகையில், ரேஞ்ஜ் ரோவர் வோக் முதல் சொகுசு வசதிகளுக்கு அப்கிரேட் செய்யப்பட்ட மினி வேன் உட்பட எக்கசக்க விலையுயர்ந்த வாகனங்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

இவற்றில் விலையுயர்ந்த மற்றும் சிறப்பு திறன் கொண்ட கார்களில் ஒன்றாகவே பென்ட்லீ கான்டினென்டல் ஜிடி கார் இருக்கின்றது. இதில் பிரீமியம் வசதிகள் ஏராளம். எனவேதான் உலக செல்வந்தர்கள் மத்தியில் இக்காருக்கு ஏகபோகமான வரவேற்பு நிலவி வருகின்றது. இந்தியாவிலும் குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அல்லு அர்ஜூன் கிட்ட இப்படி ஒரு காரா? இதோட விலை எவ்ளோ சொன்னா நம்பவே மாட்டீங்க... ஏன்னா, அவ்ளோ அதிகம்!

அல்லு அர்ஜூன் பயன்படுத்திய வி8 கன்வர்டபிள் காரில் 4.0 லிட்டர் வி8, ட்வின் டர்போசார்ஜட் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, அதிகபட்சமாக 500 பிஎஸ் பவரையும், 660 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இக்கார் ஒட்டுமொத்தமாக 2.4 டன் எடைக் கொண்டது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Telugu Star Allu Arjun Spotted In Bentley Continental GT V8 Car With His Family. Read In Tamil.
Story first published: Tuesday, December 22, 2020, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X