கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸையே டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி கார்கள் அசால்டாக ஓரம் கட்டியிருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்19 (கொரோனா) வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதன் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியிருக்கின்றது. அரசு சார்பில் கோவிட்-19 வைரஸைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என்று பிரச்சாரம் செய்யப்பட்டாலும், மக்கள் மத்தியில் புதுவிதமான பீதியை அந்த வைரஸ் கிளப்பியுள்ளது.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

இதுவரை, பல ஆயிரக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கானோரை உலகம் முழுவதிலும் புதிதாக இந்த நோய் தாக்கி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

ஆகையால், மிகத் தீவிரமாக இந்த வைரஸ் தொற்று பரவி வருவது உறுதியாகியிருக்கின்றது. இந்த வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் வுஹான் நகரிலேயே அதன் பாதிப்பு அதிகமாக காணப்படுகின்றது. ஆகையால், குறிப்பிட்ட நாடுகள் சீனா, இந்தியா உள்ளிட்ட கோவிட்-19 வைரஸ் பாதிப்புள்ள நாடுகளில் இருந்து மக்கள் வருகையை தவிர்த்திருக்கின்றது.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

இந்த கோவிட்-19 வைரஸினால் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்துறைகளும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, வைரஸ் தாக்கத்தினால் இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றது.

அதேசமயம், இந்தியாவைக் காட்டிலும் சீனா மிக அதிக பாதிப்பினை கோவிட்-19 வைரஸினால் அடைந்துள்ளது. குறிப்பாக, சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

பெரும்பாலான உலக நாடுகளில் தயாராகும் சீன நிறுவனங்களின் கார்களுக்கான முக்கியமான உதிரிபாகங்கள் சீனாவில் இருந்தே ஏற்றுமதிச் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் இந்நிலை கடுமையாக பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக, வுஹான் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் மிக மிக கடுமையாக பாதிப்படைந்திருக்கின்றன.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

இந்நிலையில், இதே சீனாவின் மிக முக்கியமான நகரத்தில் தயாரிப்பைச் செய்து வரும் டெஸ்லா நிறுவனம் மட்டும் உற்பத்தியிலும், விற்பனையிலும் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்லாகுறித்து வெளியாகியிருக்கும் இந்த தகவல் சீனா ஆட்டோமொபைல்ஸ் துறையையே பெரும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. ஏனென்றால், கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் சீனா வாகனத்துறையே ஒட்டுமொத்தமாக கடும் சரிவைச் சந்தித்து வருகின்றது.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

இந்த நிலையில், டெஸ்லா தானியங்கி மின்சார வாகன உற்பத்தி நிறுவனம், அதன் ஃப்ரெமென்ட் உற்பத்தியாலையில் இருந்து 1,000,000-வது யூனிட் காரை விற்பனைக்காக வெளியேற்றிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

இதுகுறித்த தகவலை டெஸ்லா தானியங்கி கார் உற்பத்தி நிறுவனத்தின் சிஇஓ-வான எலன் மஸ்க் டுவிட்டர் வாயிலாக வெளியிட்டுள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின்கீழ் ஒட்டுமொத்தமாக ஐந்து மாடல் கார்களே விற்பனைக்கு கிடைக்கின்றன. அவை மாடல் எஸ், மாடல் எக்ஸ், மாடல் 3, மாடல் ஒய் மற்றும் ஜென் ரோட்ஸ்டர் ஆகிய மாடல்கள்தான் அவை. விரைவில், சைபர் ட்ரக் என்ற பிக்-அப் டிரக்கையும் இந்த வரிசையில் டெஸ்லா களமிறக்க இருக்கின்றது.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

டெஸ்லா நிறுவனம், கலிஃபோர்னியா உள்ல ஃப்ரெமென்ட் உற்பத்தியாலை மட்டுமின்றி மிகப்பெரிய தயாரிப்பாலையாக சீனாவின் ஷாங்காய் நகரத்தில் டெஸ்லா ஜிகாவை தொடங்கியது. இங்கு வருடம் ஒன்றிற்கு 2,50,000 யூனிட் டெஸ்லா கார்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் இந்நிறுவனமும் லேசான பாதிப்பைச் சந்தித்தாலும் அது பெரியளவில் இல்லாத வகையிலேயே புதிய மைல் ஸ்டோனை டெஸ்லா பெற்றிருக்கின்றது.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

இதனை வெளிப்படுத்தும் வகையில் உலகின் அதிகம் விற்பனையாகும் கார்களில் டெஸ்லா நிறுவனத்தின் கார்கள் இடம்பெற்றிருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிகம் விற்பனையாகும் சொகுசு காரான பிஎம்டபிள்யூவையே ஓரம் கட்டியிருக்கின்றது டெஸ்லாவின் மின்சார கார்கள்.

கோவிட்-19 வைரசையே ஓரம் கட்டிய டெஸ்லா... குதூகலத்தில் டுவிட் போட்ட எலன் மஸ்க்...

தொடர்ந்து, உலகளவில் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்பு நிலவிய வண்ணமே இருக்கின்றது. ஆனால், இந்நிறுவனத்தின் தானியங்கி மின்சார கார்கள் இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla CEO Elon Musk Tweets About One-Million Production. Read In Tamil.
Story first published: Tuesday, March 10, 2020, 19:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X