டெஸ்லாவின் கிறிஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா? இது இளசுகளுக்கு ரொம்ப பிடிக்கும்...

டெஸ்லா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக யாரும் எதிர்பார்க்காத ஒன்றை வழங்கி வருகின்றது. அதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

டெஸ்லாவின் கிறிஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா? இது இளசுகளுக்கு ரொம்ப பிடிக்கும்...

பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசை வழங்க இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இந்த சிறப்பு பரிசு அனைவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, புதிதாக காரை வாங்குவோர் மற்றும் முன்னதாக காரை வாங்குவோருக்கும் இந்த பரிசு பொருந்தும்.

டெஸ்லாவின் கிறிஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா? இது இளசுகளுக்கு ரொம்ப பிடிக்கும்...

சாஃப்ட்வேர் அப்டேட்டினையே கிறிஸ்துமஸ் பரிசாக டெஸ்லா அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் மூன்று வீடியோ கேம்களைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி, கூடுதல் சில சிறப்பு வசதிகளையும் இந்த அப்டேட் வழங்க இருக்கின்றது.

டெஸ்லாவின் கிறிஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா? இது இளசுகளுக்கு ரொம்ப பிடிக்கும்...

ஆகையால், இனி டெஸ்லா மின்சார காரில் பயணிப்போர் கூடுதல் பொழுதுபோக்குடன் பயணிப்பர் என்பது தெரியவந்துள்ளது. புதிதாக வழங்கப்பட்டிருக்கும் அப்டேட்டின் மூலம் கிடைத்துள்ள அனைத்து கேம்களுமே ஓட்ட பந்தயத்தை மையமாகக் கொண்டதாக இருக்கின்றது.

டெஸ்லாவின் கிறிஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா? இது இளசுகளுக்கு ரொம்ப பிடிக்கும்...

இது விளையாட்டு பிரியர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் கிராஃபிக்ஸ் மேம்படுத்தப்பட்ட திறனில் காட்சியளிக்கின்றது. எனவேதான் இளசுகள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் இந்த வீடியோ கேம் கவரும் என கூறப்படுகின்றது.

டெஸ்லாவின் கிறிஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா? இது இளசுகளுக்கு ரொம்ப பிடிக்கும்...

டெஸ்லா நிறுவனத்தின் எந்தவொரு தயாரிப்பும் இதுவரை இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. ஆனால், இந்த நிலையை மாற்றும் முயற்சியில் டெஸ்லா ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், விரைவில் இந்நிறுவனத்தின் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டெஸ்லாவின் கிறிஸ்துமஸ் பரிசு என்ன தெரியுமா? இது இளசுகளுக்கு ரொம்ப பிடிக்கும்...

இதன் உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைக்கும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது. பெங்களூரு, மஹாராஷ்டிரா மற்றும் தமிழகம் இதில் ஏதேனும் ஓர் மாநிலத்தில்தான் டெஸ்லா மின்சார கார் உற்பத்தி மையம் அமைய இருக்கின்றது.

Most Read Articles

English summary
Tesla Announced Software Update For EV's. Read In Tamil.
Story first published: Friday, December 25, 2020, 13:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X