இந்தியா ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ஷாங்காயில் டெஸ்லா செய்யப்போகும் காரியம்... என்ன தெரியுமா?

ஷாங்காயில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியா ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ஷாங்காயில் டெஸ்லா செய்யப்போகும் காரியம்... என்ன தெரியுமா?

டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலைகளில் மின்சார வாகன உற்பத்தி திறனையும், அவற்றை வேகமாக பல்வேறு சந்தைகளுக்கு அனுப்புவதற்கான திறன்களையும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில், சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள தொழிற்சாலை தற்போது டெஸ்லாவின் மிக முக்கியமான உற்பத்தி மையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

இந்தியா ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ஷாங்காயில் டெஸ்லா செய்யப்போகும் காரியம்... என்ன தெரியுமா?

அதுவும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்ட ஒரே ஆண்டில் டெஸ்லாவின் முக்கிய உற்பத்தி ஆலைகளில் ஒன்று என்ற அந்தஸ்தை ஷாங்காய் தொழிற்சாலை அடைந்துள்ளது. இந்த ஷாங்காய் தொழிற்சாலையை டெஸ்லா நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டில்தான் அதிகாரப்பூர்வமாக திறந்தது. ஆனால் அதற்குள்ளாக சீனா மற்றும் உலக சந்தைகளுக்கான முக்கிய உற்பத்தி மையமாக ஷாங்காய் தொழிற்சாலை மாறியுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

இந்தியா ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ஷாங்காயில் டெஸ்லா செய்யப்போகும் காரியம்... என்ன தெரியுமா?

எனவே ஷாங்காய் தொழிற்சாலையில் இருந்து வரும் 2021ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தால் அரை மில்லியன் (5 லட்சம்) மின்சார கார்களை உற்பத்தி செய்து வெளியேற்ற முடியும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாங்காயில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி திறனை அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தியா ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ஷாங்காயில் டெஸ்லா செய்யப்போகும் காரியம்... என்ன தெரியுமா?

வரும் 2021ம் ஆண்டில், 5.50 லட்சம் மின்சார கார்களை ஷாங்காய் தொழிற்சாலையில் உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து எலெக்ட்ரெக் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மொத்த எண்ணிக்கையில் சுமார் 3 லட்சம் மாடல் 3 (Model 3) மின்சார கார்கள் இருக்கும் என்று அதே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ஷாங்காயில் டெஸ்லா செய்யப்போகும் காரியம்... என்ன தெரியுமா?

எஞ்சியவை மாடல் ஒய் (Model Y) மின்சார எஸ்யூவி கார்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஷாங்காயில் உள்ள டெஸ்லா தொழிற்சாலை ஆரம்பத்தில் மாடல் 3 மின்சார கார்களை மட்டுமே உற்பத்தி செய்தது. ஆனால் தற்போது அங்கு மாடல் ஒய் மின்சார எஸ்யூவி கார்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியா ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ஷாங்காயில் டெஸ்லா செய்யப்போகும் காரியம்... என்ன தெரியுமா?

ஷாங்காய் தொழிற்சாலைக்கு டெஸ்லா நிறுவனம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இங்கிருந்து உலகின் பல்வேறு சர்வதேச சந்தைகளுக்கு தற்போது மின்சார கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போதைய நிலையில் சீனாதான் உலகின் மிகப்பெரிய மின்சார வாகன சந்தையாக திகழ்ந்து கொண்டுள்ளது.

இந்தியா ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ஷாங்காயில் டெஸ்லா செய்யப்போகும் காரியம்... என்ன தெரியுமா?

எனவே ஷாங்காய் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் சீனாவின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதே சமயம் பல்வேறு நாடுகளுக்கான ஏற்றுமதி மையமாகவும் மாற்ற முடியும். இதுபோன்ற காரணங்களால், ஷாங்காய் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை டெஸ்லா நிறுவனம் அதிகரிப்பது அர்த்தமுள்ளதாகவே இருக்கும்.

இந்தியா ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் ஷாங்காயில் டெஸ்லா செய்யப்போகும் காரியம்... என்ன தெரியுமா?

சீனாவில் இப்படி சுறுசுறுப்பாக இயங்கி கொண்டுள்ள டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகையை பலர் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக எலான் மஸ்க்கிடம் பலமுறை கேள்வி எழுப்பப்பட்டு விட்டது. அனேகமாக அடுத்த ஆண்டு டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tesla Could Roll Out 5 Lakh Electric Cars From Shanghai Facility In 2021. Read in Tamil
Story first published: Wednesday, November 11, 2020, 17:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X